Trichy Siva , venkaiah naidu Twitter
இந்தியா

வெங்கையா நாயுடு பிரியாவிடை: கௌரவத்தை காப்பாற்றியிருக்கிறீர்கள் - நெகிழ்ந்த திருச்சி சிவா

முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பிரியாவிடையில் "சினிமாவில் எஸ்வி ரெங்காராவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் நினைவு வரும். அந்த கம்பீரமான உருவம் உங்களுடையது" என்று பேசினார் திமுக எம்.பி திருச்சி சிவா

NewsSense Editorial Team

துணைக் குடியரசுத் தலைவரும் ராஜ்ய சபாவின் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிக் காலம் முடிந்து விடைபெறுகிறார். அதை ஒட்டி அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு விடை கொடுத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்கள். திமுக எம்.பி திருச்சி சிவா வெங்கையா நாயுடுவுக்கு விடை கொடுத்துப் பேசிய உரையின் சுருக்கம்:

சில தருணங்கள் தவிர்க்க முடியாமலும் அதே நேரம் ஏற்க முடியாமலும் இருக்கிறது. இது அது போன்றதொரு தருணம். என் கட்சி எம்பிக்கள் சார்பிலும் என் சார்பிலும் எனது வணக்கத்தையும், மரியாதையையும், வாழ்த்துக்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் ஒரு வலிமையான தலைவர். சிவா என்று உறுதியாகச் சொன்னாலே நான் அமர்ந்து விடுவேன். தமிழில் அரிமா நோக்கு என்று சொல்வார்கள். அது ஒரு சிங்கத்தின் பார்வை. காட்டில் சிங்கம் மட்டுமே அனைத்து விலங்குகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சிங்கம்.

நீங்கள் ஒரு மாணவனாக உங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தீர்கள். நீங்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தின் படி மாணவர் சங்கத்தில் (ஏபிவிபி) வேலை செய்தீர்கள். அதற்கு பிறகு உங்களது அரசியல் வாழ்க்கையில் பல படிகள் ஏறி ஏணியில் பயணம் செய்தீர்கள். ஒரு போதும் இறங்கவில்லை. சட்டமன்றத் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சி உறுப்பினராக, அமைச்சராக, உங்கள் கட்சித் தலைவராக இப்போது நாட்டின் இரண்டாவது உயர் பதவியான துணை குடியரசுத்தலைவர் வரை வந்து விட்டீர்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறோம். அவை ஜனநாயகத்தின் அங்கம் என்றாலும் அதை நீங்கள் பொறுமையுடன் அணுகியிருக்கிறீர்கள்.

உங்கள் பதவிக் காலத்தில் நீங்கள் செய்த மூன்று முக்கிய விசயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒன்று, நாட்டின் 22 தேசிய மொழிகளை ராஜ்யசபாவில் பேசலாம் என்று கொண்டு வந்தீர்கள். இப்படி அரசியல் சாசனம் அளித்திருக்கும் வட்டார மொழி உரிமைகளுக்கு ஆதரவாக இருந்தீர்கள்.

இரண்டு இந்த அவையில் ஒரு மசோதாவையோ, பேப்பரையோ ஒரு அமைச்சர் முன் வைக்கும் போது பிரிட்டீஷ் மரபுப்படி பணிவாக வைக்கிறேன் என்று சொல்ல வேண்டும். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகிய எங்களுக்கு இது உவப்பில்லை. அதை நீங்கள் நீக்கினீர்கள். இப்போது அனைவரும் அவையில் மசோதாவை சாதாரணமாக முன் வைக்கிறார்கள்.

மூன்றாவதாக நாடாளுமன்ற செயலருக்கு நாங்கள் கடிதம் எழுதும் போது தங்கள் உண்மையுள்ள என்று உறுப்பினர்கள் எழுதவேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பள்ளி மாணவன் போல இப்படி எழுதுவதை மாற்றி மரியாதையுள்ள என்று மாற்றினீர்கள். அதையும் நான் பாராட்டுகிறேன். உறுப்பினர்களின் கௌரவத்தை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள்.

உங்கள் முகத்தையும், பணிகளையும் நாங்கள் என்றுமே மறக்க முடியாது. சினிமாவில் எஸ்வி ரெங்காராவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் நினைவு வரும். அந்த கம்பீரமான உருவம் உங்களுடையது.

இறுதியாக உங்களுடைய சுயசரிதையை நீங்கள் எழுதுமாறு நான் கோரிக்கை வைக்கிறேன். அது நாட்டிற்கு ஒரு பங்களிப்பாக இருக்கும். நான் உங்களை இனி நிறைய மிஸ் பண்ணுவேன் சார். நன்றி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?