"கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு" என்ற காந்தி கூற்று கூட இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சி தான் நாட்டை நல்ல பாதையில் இட்டு செல்லும்.
அதே போல தான் இந்தியாவின் முக்கிய வளர்ச்சிக்கு கிராமங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் இருக்கும் சிறந்த கிராமங்களை தற்போது நாம் பார்க்க உள்ளோம்.
பொதுவாக கிராமங்களில் மில்லியன்களில் சம்பாதிக்கும் பணக்காரர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவிய நிலையில் அதனை உடைத்து காண்பித்ததுள்ளது மகாராஷ்டிராவின் அகமத்நகர் பகுதியில் உள்ள ஹிவாரே பஜார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் சிக்கிய இந்த கிராமம் 1990-க்கு பிறகு அதிக பணக்காரர்கள் உள்ள விவசாய சமூகமாக உயர்ந்துள்ளது. தற்போது ஹிவாரே பஜார் கிராமம் 60 மில்லியனர்களை கொண்ட பணக்கார சமூகமாக உள்ளது, இதற்கு முக்கிய பங்கு வகித்த போபத்ராவ் பவாருக்கு 2020 மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
தற்போது ஆளும் பாஜக அரசு அடிக்கடி சொல்லும் வார்த்தை ஸ்மார்ட் கிராமம், இதற்கு உதாரணமாக திகழ்கின்றது குஜாரத் மாநிலத்தில் உள்ள புன்சாரி கிராமம். இந்த கிராமத்தில் கல்வியில் அதி நவீன வசதி பயன்படுத்தப்படுகிறது.
இந்த கிராமத்தில் அனைத்து மக்களுக்கும் Wi-Fi இணைப்பு உள்ளது. கிராமத்தில், பாதுகாப்பை அதிகரிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பஞ்சாயத்தில் உள்ளூர் கனிம நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் திட்டங்கள், சுகாதார மையம், வங்கி மற்றும் கட்டணமில்லா புகார் கையாளும் மையங்கள் உள்ளன. இதைப் பார்த்த கென்யா நைரோபி பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களிலும் இதை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.
மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள மாவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே "தூய்மையான கிராமம்" என்று குறிப்பிடப்படுகிறது.
500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் உற்பத்தியாகும் கழிவுகள் அனைத்தும் சிறப்புக் கழிவு மேலாண்மை அமைப்பு மூலம் உரமாக்கப்படுகிறது. கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதுடன் பிளாஸ்டிக் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பசுமை மற்றும் தூய்மையான கிராமம் விருதுகளை வென்றுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள ஷானி ஷிங்கனாபூர் இந்தியாவின் பாதுகாப்பான கிராமமாக அறியப்படுகிறது
இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்கும் கதவு இல்லை என கூறப்படுகிறது. இங்கு உள்ள மக்களுக்கு அதிக தெய்வ நம்பிக்கை உள்ளதால் குற்ற விகிதங்கள் குறைந்து இருப்பதாக கருதப்படுகிறது.
கிராமத்தின் நடுவில் இருக்கும் சனிபகவான் தங்கள் கிராமத்தைக் காப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள்.
பீகாரில் போத்கயாவிற்கு அருகிலுள்ள தர்னை, பெரும்பாலான கிராமங்களைப் போலவே, அடிப்படை எரிசக்தியைப் பெற போராடியது.
பல தசாப்தங்களாக, அவர்கள் டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் மாட்டு சாணத்தை எரிபொருளாகப் பயன்படுத்தினர். கிராமத்தின் 2,400 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கிரீன்பீஸின் 100-கிலோவாட் மைக்ரோகிரிட் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் அமைப்பை நிறுவத் தொடங்கினர்.
100-கிலோவாட் சோலார் மைக்ரோகிரிட் - சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்கள் 450 வீடுகள், சிறு வணிகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust