பண உதவிக்கேட்டு சாலையோரங்களில் பிச்சையெடுப்பவர்களுக்கு என்று ஒரு உதவிக்குழுவை தொடங்கியுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர். அதன் மூலம் அவர்கள் திறனை மேம்படுத்தி, சிறு தொழில்முனைவோராக மாற்றி வருகிறார்.
நம் ஊர்களில் சிக்னல், சாலையோரங்கள், அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் என காசு கேட்டு வருபவர்களை சாதாரணமாக காணமுடியும். சிலர் அவர்களுக்கு பணம் அல்லது, உணவு போன்றவற்றை வாங்கிக்கொடுத்து உதவுவது வழக்கம்.
ஆனால் அப்படி காசு கேட்டு வருபவர்களுக்கு உதவ வேண்டும் என உண்மையில் நினைத்தால், பணம் கொடுக்கவேண்டாம் எனக் கூறுகிறார் சந்திரா மிஸ்ரா என்ற நபர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திரா மிஸ்ரா ஒரு சமூக சேவகர். இவர் பெக்கர்ஸ் கார்ப்பரேஷன் என்கிற உதவிக்குழு ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் பிச்சை எடுத்து வருபவர்களுக்கு, அல்லது பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார். இந்த பெக்கர்ஸ் கார்பரேஷனின் டேக் லைன், "Don't Donate, Invest"
வேலையின்மை தான் இப்படி பலரும் பணம் கேட்டு வருவதற்கு முக்கிய காரணம் எனக் கூறுகிறார் சந்திரா மிஸ்ரா,
“தானம் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்ததில்லை. இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான்” எனக் கூறுகிறார்
மேலும், ஒருவருக்கு வேலை என்ற ஒன்று இருந்தால் தான் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார். தங்களது முயற்சியின் நோக்கம் பிச்சைக்காரர்களையும் தொழில்முனைவோராக மாற்றுவது தான் என்கிறார்.
வாரணாசி பகுதியில், ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அங்குள்ள பிச்சைக்காரர்களிடம் பேசி அவர்களது நிலையை அறிந்துகொண்டார். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுவதாக அவர் கூறியபோது முதலில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், கொரோனா பெருந்தொற்றால், இரண்டாவது பொதுமுடக்கம் போடப்பட்ட போது, இவரது உதவியை நாடி மக்கள் வரத்தொடங்கினர்.
கடந்த 2021ஆம் ஆண்டு, கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் சந்திரா மிஸ்ராவை தேடி வந்துள்ளார். அப்பெண்ணுக்கு ஒரு மகனும் இருந்தான்.
மிஸ்ரா மற்றும் அவரது குழுவினர் அப்பெண்ணுக்கு தையல் கற்றுக்கொடுத்தனர்.
அதன் மூலம் அவருக்கு சொந்தமாக ஒரு வேலை வாய்ப்பை உண்டாக்கினார். இந்த முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, பலரும் மிஸ்ராவை தேடி வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பெக்கர்ஸ் அசோசியேஷன் “For Profit Company” என பதிவு செய்யப்பட்டது. சந்திரா மிஸ்ராவுடன் இந்த முன்னெடுப்பில், பத்ரிநாத் மிஸ்ரா மற்றும் தேவெந்திர தாபா என்பவர்களும் பார்ட்னர்களாக உள்ளனர்.
இவர்கள் பைகள், பூஜைக்கு தேவையான பொருட்கள், பூக்கள் போன்றவற்றை விற்பனை செய்வது, காபி ஷாப்களில் வேலை என அவர்களுக்கு ஏதுவான தொழில்களில் ஈடுபடுகின்றனர்
தற்போது 12 குடும்பங்கள் பைகள் தைக்கின்றன, இரண்டு குடும்பங்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்கின்றனர்
இந்த பெக்கர்ஸ் கார்பரேஷனுக்கு இவர்கள் நிதியை பொதுமக்களிடம் இருந்து பெறுகின்றனர். பத்து ரூபாய் முதல், தங்களால் ஆன நிதி மக்களால் வழங்கப்படுகிறது. இவர்கள் பெறும் தொகையை வைத்து, உதவி கேட்டு வருபவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வேலையை கற்றுகொண்டு தொழில் செய்து வருமானம் ஈட்டிய பின்பு அதிலிருந்து, மக்கள் கொடுத்த தொகையை இவர்கள் திருப்பி அவர்களிடமே தந்து விடுகின்றனர்.
“நாங்கள் எங்களுக்கு முதலீடு தான் வேண்டும் என்றோம். தானம் அல்ல. அதனால் பணத்தை திருப்பிக்கொடுத்தோம். இதில், முதலீட்டாளர்களுக்கும் 16.5% லாபமும் கிடைத்தது” என்றார் மிஸ்ரா.
இந்த முன்னெடுப்பில் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதில் ரூ.50,000 பயிற்சியளிக்கவும், மீதமுள்ள பணம் அவர்கள் தொழில் தொடங்க தேவையான வசதிகளை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
வாரணாசி பகுதியில், சிவன், அனுமான் வேடம் தரித்து பிச்சை எடுக்கும் குழந்தைகள் படிப்பதற்காக School of Life என்கிற ஒரு பள்ளிக்கூடத்தையும் கட்டியுள்ளார்.
தற்போது பல முதலீட்டாளர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். தேநீர் கடை உள்ளிட்ட புதிய தொழில்களும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust