”ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்பாதீங்க” - வில்லேஜ் குக்கிங் சேனல் சொன்னதென்ன? canva
இந்தியா

”ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்பாதீங்க” - வில்லேஜ் குக்கிங் சேனல் சொன்னதென்ன?

மருத்துவ செலவிற்கு வில்லேஜ் குக்கிங் சேனல் உதவி கேட்டதாகவும், அதை ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பொய்யாக பரவியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனடியாக வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

Priyadharshini R

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங் சேனல் வீடியோவில் இடம்பெற்றார். அவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் படுவைரலானது.

இந்நிலையில் இந்த சேனலில் தோன்றும் தாத்தாவிற்கு சமீபத்தில் இதய பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் எனவும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் தாத்தாவிற்கு மருத்துவ உதவி கேட்டு, அதை ராகுல் காந்தி செய்யவில்லை என்று சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. மருத்துவ செலவிற்கு வில்லேஜ் குக்கிங் சேனல் உதவி கேட்டதாகவும், அதை ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பொய்யாக பரவியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனடியாக வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், ”இது முற்றிலும் பொய், எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” என அந்த சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?