Harsh Jain Twitter
இந்தியா

Meta, Twitter லே ஆஃப்: வேலை தருவதாக கூறிய Dream11 நிறுவனர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன?

Keerthanaa R

மெடா மற்றும் டிவிட்டர் நிறுவனங்களில் வேலையிழந்தவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார் Dream11 துணை நிறுவனர் ஹர்ஷ் ஜெய்ன்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை சொந்தமாக்கிய பிறகு, பெரிய அளவில் லே ஆஃப் செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் மெடா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்கும் லே ஆஃபை அறிவித்தார். இதில் பெறும்பாலான இந்தியர்கள் அவர்களது வேலையை இழந்தனர்.

இதனை தொடர்ந்து டிரீம்11 நிறுவனத்தின் துணை நிறுவனர் ஹர்ஷ் ஜெய்ன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் அமெரிக்காவில் இந்த ஆண்டு 50,000த்துக்கும் மேற்பட்ட லே ஆஃப்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை வீடு திரும்ப நினைவுப்படுத்துங்கள் என்றார்.

"அடுத்த தசாப்தத்தில் இந்திய தொழில்நுட்பம் உயர் வளர்ச்சி திறனை அடையும் என்பதை இந்திய டெக்கிகள் (தொழில்நுட்பத்துறையில் திறமையானவர்கள்) உணர உதவும் வகையில், இந்தியர்கள் தாயகம் திரும்ப (குறிப்பாக விசா பிரச்னைகள் உள்ளவர்கள்) நினைவூட்டங்கள்" என்றும் கூறியிருந்தார்.

டிரீம் 11 நிறுவனம் பொருளாதார ரீதியுலும் நிலையாக இருப்பதாக கூறிய ஜெய்ன், நிறுவனம் கூறியயுள்ள பணிகளுக்கு யாராவது தகுதியானவராக இருந்தால், தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

இவரது இந்த ட்வீட் இணையவாசிகள் இடையில் கலவையான வரவேற்பை பெற்றது. ஒருவர் இதற்கான பதிலை கூறும்போது, "இந்த பிரச்னையை யாராவது முன்னிலைப்படுத்த தான் வேண்டும். வெளிநாடுகளில் இருந்து 50% தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட இந்தியாவுக்கு திரும்பி வந்தால், அது இந்தியாவின் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும்." என்றார்.

ஆனால் சிலரோ, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பமாட்டார்கள் என்று தெரிவித்தனர். மோசமான சாலைகள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், மற்றும் இன்னும் சில காரணங்கள், இந்தியர்களை நாடு திரும்ப விடாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

"அமெரிக்காவில் இருப்பவர்கள் நிறைய சம்பாதிக்கவோ, வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமோ இங்கு தங்கவில்லை. இங்கு மன அமைதி, வேலை செய்ய சிறந்த சுற்றுசூழல் போன்ற நேர்மறை காரணங்கள் நிறைய இருக்கின்றன" என்றார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?