"பெட்ரோல் போதவில்லை" NewsSense
இந்தியா

"பெட்ரோல் போதவில்லை" - அபராதம் விதித்த கேரளா போலீஸ் - வைரல் புகைப்படம்

Keerthanaa R

கேரளாவில் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் போதுமான அளவு எரிபொருள் இல்லாமல் ஓட்டிசென்றதால் போக்குவரத்து காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாம் பொதுவாக வாகனம் ஓட்டும் போது பல காரணங்களுக்காக டிராஃபிக் போலீஸிடம் சிக்கி அபராதம் கட்டியிருப்போம். அது பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகமாக செல்வது, ட்ரிபிள்ஸ் செல்வது போன்ற காரணங்களுக்காக அபராதம் செலுத்திருப்போம். ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு வித்தியாசமான ஒரு காரணத்திற்காக டிராஃபிக் போலீசார் அபராதம் விதித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பேசில் சியாம் என்ற நபர் அலுவலகத்திற்கு தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஒருவழி (One Way) சாலையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டி வந்ததால் சியாமை போக்குவரத்து காவலர் நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அவருக்கு ரூ.250 அபராதம் விதித்துள்ளார்.

அபராதம் விதிக்கப்பட்ட பிறகு அதற்கான சலானை சியாம் போலீசாரிடம் பெற்றுள்ளார். அந்த சலானில், சியாம் தனது இரு சக்கர வாகனத்தில் போதுமான அளவு பெட்ரோல் இல்லாமல் ஓட்டியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டிருந்தது. அதை புகைப்படம் எடுத்து சியாம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் வைரலான நிலையில், இந்திய மோட்டார் வாகனச் சட்டத்திலோ அல்லது, மாநில சட்டத்திலோ, குறைந்த எரிபொருளுடன் வாகனம் ஓட்ட தடை இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

பேசில் சியாம் பகிர்ந்த சலானின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?