Air India: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி; அலட்சியமாக விட்ட விமான குழு ட்விட்டர்
இந்தியா

Air India: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி; அலட்சியம் காட்டிய விமான ஊழியர்கள்

தனது ஆடைகள், உடமைகள், ஷூ அனைத்தும் நனைந்துவிட்டதாக கூறியபோது, விமானக்குழுவினர் அவருக்கு மாற்று ஆடை மற்றும் காலணிகளை வழங்கி இருக்கையில் அமருமாறு தெரிவித்துள்ளனர்.

Keerthanaa R

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது மது போதையில் சக பெண் பயணி மேல் சிறுநீர் கழித்துள்ளார் மற்றொரு பயணி.

இதை கண்டும் காணாததுபோல விமானக் குழுவினர் இருந்ததாகவும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி ஏர் இந்தியா குழும சேர்மேனுக்கு கடிதம் எழுதியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.

கடந்த நவம்பர் மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா AI 102 விமானத்தில் பிசினஸ் கிளாஸில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணித்தார். அப்போது உடன் பயணித்த நபர் ஒருவர், மது போதையில், அந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

மதிய உணவுக்கு பின்னர், விமானத்தினுள் விளக்குகள் அனைக்கப்பட்டிருந்தது. அப்போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அப்பெண் தெரிவித்திருக்கிறார்.

சிறுநீர் கழித்துவிட்டு சிறிது நேரம் அந்த ஆசாமி நகராமல் அவர் அருகிலேயே நின்றுக்கொண்டிருக்கிறார். அருகில் இருந்த மற்றொரு பயணி அந்த மது போதை ஆசாமியை அப்புறப்படுத்தியுள்ளார்

இது குறித்து விமானக் குழுவினரிடம் அந்த பெண் புகாரளித்திருக்கிறார். தனது ஆடைகள், உடமைகள், ஷூ அனைத்தும் நனைந்துவிட்டதாக கூறியபோது, விமானக்குழுவினர் அவருக்கு மாற்று ஆடை மற்றும் காலணிகளை வழங்கி இருக்கையில் அமருமாறு தெரிவித்துள்ளனர்.

டெல்லி வந்திறங்கியதும், எதுவுமே நடக்காதது போல அந்த நபர் சென்றிருக்கிறார்

தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபரை, ஏர் இந்தியா விமானக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குற்றமற்றவர் போல விட்டுவிட்டதால் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த பெண்.

இந்த சம்பவம் குறித்து, மறு நாள், ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனிடம் புகார் அளித்தார் பாதிக்கப்பட்ட பெண்.

புகாரை ஏற்றுக்கொண்ட நிறுவனம், சம்பந்தப்பட்ட நபர் மீதும் அலட்சியமாக செயல்பட்ட விமானக் குழுவினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த சம்பவம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மீது இனி விமானத்தில் பயணிக்க தடை விதிக்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெண் பயணி புகாரளித்தபோதிலும், அலட்சியமாக நடந்துக்கொண்ட விமானக் குழுவினரை சாடி வருகிறது இணையம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

 Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 Follow us on:

 Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

 Nalam 360 : https://www.facebook.com/Nalam360

 Newsnow: https://www.facebook.com/GenZSense

 TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

 Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?