Dwarahat: மலைகளில் மறைந்திருக்கும் இந்த நகரத்தை சொர்க்கத்தின் வாயில் என ஏன் அழைக்கின்றனர்? twitter
இந்தியா

Dwarahat: மலைகளில் மறைந்திருக்கும் இந்த நகரத்தை சொர்க்கத்தின் வாயில் என ஏன் அழைக்கின்றனர்?

துவாரஹத்தை கோவில்களின் நகரம் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில்களில் இருந்து தென்படும் இமயமலையின் ரம்மியமான காட்சி, நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

Keerthanaa R

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைகளின் நடுவே மறைந்துள்ளது துவாரஹத் எனப்படும் பழமையான நகரம் ஒன்று. இது நம்மில் பலர் கேள்விப்படாத இடமாக இருந்தாலும், துவாரஹத் பற்றி அறிந்தவர்கள் இந்நகரத்தை சொர்த்தின் நேரடி வாயில் என்று அழைக்கின்றனர்.

இந்த நகரத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

உத்தரகாண்டில் உள்ள குமாவூன் மலைகளில் அமைந்திருக்கிறது துவாரஹத். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1510 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வரலாறு, ஆன்மீகம், சாகசம், இயற்கை அழகு என இந்த நகரத்தின் அழகியலுக்கு பஞ்சமில்லை

ராணிகேட்டில் இருந்து 1 மணி நேரத்துக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருக்கும் இந்த மலை நகரத்தில், 55 இந்துக் கோவில்கள் உள்ளன.

இதனால் துவாரஹத்தை கோவில்களின் நகரம் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில்களில் இருந்து தென்படும் இமயமலையின் ரம்மியமான காட்சி, நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

மஹாசு தேவதா கோவில், துணாகிரி கோவில், மிருத்யுஞ்சய கோவில், மா பராஹி ஆகிய கோவில்கள் நிச்சயம் பார்க்கவேண்டியவை.

இவற்றில் மலை உச்சியில் அமர்ந்திருக்கும் துணாகிரி கோவில் அதன் அற்புதமான கட்டிட வேலைபாடுகளுக்காக பெயர் பெற்றது

இங்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் நந்தா தேவி திருவிழா மிகவும் பிரபலமானது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் சடங்குகளை காண பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இதை தவிர வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி, நவராத்திரி ஆகிய இந்து பண்டிகைகளும் இங்கு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

துவாரஹத் என்பதன் பொருள் சொர்க்கத்துக்கான வழி எனப்படுகிறது. அதே சமயத்தில், அமைதியான இயற்கை சுற்றுச்சூழல், காடுகளும் மலைகளும் கண்கவர் காட்சிகள் சூழ்ந்த இந்த இடம் சொர்க்கத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது.

சாகசங்கள் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த மலையில் டிரெக்கிங் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதில் மிகவும் பிரபலமானது என்றால் பண்டுகோலி குகைகளுக்கு செல்லும் வழி தான். இந்த குகை இந்து இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் தங்கியிருந்த குகை என்று கூறப்படுகிறது.

பெரிதும் வெளியில் தெரியாமல் இருக்கும் இந்த மலை நகரம், அமைதியை தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?