beef  Twitter
இந்தியா

பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியர் கைது - வலுக்கும் ஆதரவு குரல்கள்

அசாமில் மாட்டிறைச்சி உண்பது சட்டப்பூர்வமானது என்று இருக்கும் நிலையில் மாநிலத்தில் பொது இடங்களில் கூட மாட்டிறைச்சி சாப்பிடுவது சட்டவிரோதமானது அல்ல என்பதால் டாலிமான் எந்த குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Priyadharshini R

அசாமில் மாட்டிறைச்சி கொண்டு வந்து சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து பல ஆதரவு குரல்கள் அவருக்காக எழுந்துள்ளன.

அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றும் டாலிமான் நெஸ்ஸா என்பவர் கடந்த மே 16 ஆம் தேதி பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததாகவும், அதனை சக ஆசிரியர்களுக்குப் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு மாட்டிறைச்சி கொடுத்ததாக டாலிமான் நெஸ்ஸா மீது பள்ளி மேலாண்மை குழுவில் மற்ற ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் பள்ளி மேலாண்மைக்குழு போலீசில் புகாரளித்ததது. இதனையடுத்து IPC சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்குமிடம் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295A (மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளைக் கலைக்கும் நோக்கம்) ஆகிய சட்டங்களின் கீழ் நெஸ்ஸா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

beef

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் டாலிமான் நெஸ்ஸாவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் அசாமில் மாட்டிறைச்சி உண்பது சட்டப்பூர்வமானது என்று இருக்கும் நிலையில் மாநிலத்தில் பொது இடங்களில் கூட மாட்டிறைச்சி சாப்பிடுவது சட்டவிரோதமானது அல்ல என்பதால் டாலிமான் எந்த குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கு சட்டப்பிரிவுகள் அனைத்தும் தவறாக உள்ளது என மூத்த வழக்கறிஞர் ஆங்ஷுமன் போரா கூறியுள்ளார்.

அதேசமயம் அவர் யாரையும் சாப்பிடத் தூண்டவில்லை மற்றும் சக ஊழியர்களுக்கு மாட்டிறைச்சியை வழங்கவில்லை. இறைச்சியைச் சாப்பிடுவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று கவுகாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரக்கி சிரௌதியா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களைப் போல , அஸ்ஸாமிலும் மாட்டிறைச்சி அல்லது மாடுகளை பலி கொடுப்பது என்பது அரசால் தடை செய்யப்படவில்லை. அங்கு மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மாட்டிறைச்சி உட்கொள்கிறார்கள்.

ஆனால் அசாம் பசு பாதுகாப்பு சட்டம் 2021 படி இந்துக்கள், ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோவில் அல்லது வைஷ்ணவ மடம் உள்ள பகுதியில் ஐந்து கிமீ சுற்றளவிலும் கால்நடைகளைப் பலி கொடுத்து மாட்டிறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.சட்டம் இயற்றப்பட்டாலும் அதன் விதிகள் இன்னும் அரசால் அறிவிக்கப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?