மணமகள் தேவை: மாப்பிள்ளை வேடமணிந்து ஊர்வலம் சென்ற இளைஞர்கள் - எங்கே? ட்விட்டர்
இந்தியா

மணமகள் தேவை: மாப்பிள்ளை வேடமணிந்து ஊர்வலம் சென்ற இளைஞர்கள் - எங்கே?

Keerthanaa R

மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், மணப்பெண் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாப்பிள்ளை போல அலங்கரித்துக்கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நிலவி வரும் ஆண் - பெண் பாலின விகிதத்தில் உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜோதி கிராந்தி பரிஷத் என்ற அமைப்பு இந்த அணிவகுப்பினை ஏற்பாடு செய்திருந்தது

Bride Calls Off Wedding After Groom’s Family Sends Her 'Cheap' Lehenga

கடந்த புதன்கிழமையன்று நடந்த இந்த அணிவகுப்பில், சோலாப்பூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மணமகன் போல வேடமணிந்து, குதிரைகள் மேல் சவாரி செய்து சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க இவர்கள் ஊர்வலமாக சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது.

அணிவகுப்பில் கலந்துகொண்ட ‘தகுதியான பேச்சிலர்களுக்கு’ மணப்பெண்ணைத் தேடித் தருமாறு அவர்கள் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இளைஞர்கள்.

அவர்கள் கூறுகையில், “பார்ப்பவர்கள் எங்களின் இந்த முயற்சியை கேலி செய்யலாம் . ஆனால், திருமண வயதில் இங்கு இருக்கும் இளைஞர்களுக்கு மணமுடிக்க பெண்கள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமாக இருக்கிறது. மாநிலத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்” என்றார் ஜோதி கிராந்தி பரிஷத்தின் நிறுவனர் ரமேஷ் பரஸ்கர்.

மேலும் அவர் கூறுகையில், மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 889 பெண்களே உள்ளனர் எனவும், பெண் சிசு கொலை காரணமாக தான் இந்த பாலின விகித வேறுபாடு உள்ளது எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?