”ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது” : ரிசர்வ் வங்கியின் விளக்கம் என்ன? | Fact Check twitter
இந்தியா

”ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது” : ரிசர்வ் வங்கியின் விளக்கம் என்ன? | Fact Check

இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதலாமா? அப்படி எழுதினால் ரூபாய் நோட்டுகள் அதன் மதிப்பை இழக்குமா? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Keerthanaa R

சிறு வயது முதலே ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அப்படி நாம் எழுதுவதை பார்த்தால், ”எழுதாதே, அந்த பணம் செல்லாது” என்று கூறுவார் அப்பா.

பல முறை, எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் வாங்க மறுப்பதையும் நாம் பார்த்திருப்போம். காதல் கடிதம் முதல், எக்ஸாம் பிட் வரை ரூபாய் நோட்டுகளில் கிறுக்கிய வரலாற்றில், நம் பெயரும் உண்டு.

ஆனால், இப்படி இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதலாமா? அப்படி எழுதினால் ரூபாய் நோட்டுகள் அதன் மதிப்பை இழக்குமா? என்ன சொல்கிறது ரிசர்வ் வங்கி? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த கட்டுரையில் காணலாம்

சமீபத்தில், Press Bureau of India தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தது. அதில் இதற்கான விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

”ரூபாய் நோட்டுகளில் எழுதினால், அது மதிப்பற்றதாகுமா?

1.இல்லை, ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தாலும், அந்த பணம் செல்லும்.

2.Clean Note Policyயின் படி, ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால், அதன் தரம் குறையும், மற்றும் அவற்றின் ஆயுளை அது குறைக்கும்.”

என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன்னர், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் புதிய விதிமுறைகள் என்று சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

“ரிசர்வ் வங்கியின் புதிய வழிக்காட்டுதல்களின்படி, ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் அது செல்லாது, மேலும், சட்டப்பூர்வ ஒப்பந்தமாக அது இருக்காது” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாகத் தான் Press Bureau of India, மேலே குறிப்பிட்ட விளக்கத்தை அளித்திருந்தது

ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட் பாலிஸி, மக்களுக்கு உயர்தர ரூபாய் நோட்டுகளை, கரன்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது, மற்றும் தரம் குறைந்த நோட்டுகளை புழக்கத்திலிருந்து விடுவிக்கவும் முடிவு செய்துள்ளது.

1999ல் இந்த கொள்கையை கொண்டுவந்த ஆர்பிஐ பொதுமக்களை ரூபாய் நோட்டுகளில் எழுதவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதுடன், சேதமடைந்த, அழுக்கடைந்த பணத்தை தடையின்றி வங்கியில் மாற்றிக்கொள்ள வசதிகளை செய்யுமாறும் வங்கிகளிடம் அறிவித்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?