180 மென்ஹிர் கற்கள் இருக்கும் ஒரு தொல்பொருள் தளத்தைப் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மிசோரம் மாநிலம், சம்பாய் மாவட்டத்தில் உள்ளது வாஞ்சியா கிராமம். இந்த கிராமம் மாநிலத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளமாகும். இந்த ஆஃப்-பீட் இடத்தில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் சுமார் 180 மென்ஹிர் கற்கள் உள்ளன.
மென்ஹிர்ஸ் என்பது உயரமான கற்கள், மனிதர்களால் அவர்களின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது.
மென்ஹிர்களுக்கு ஒரு முக்கிய உதாரணமாக இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்ச் சொல்லலாம். பிரிட்டனில் அமைந்துள்ள ஸ்டோன் ஹெஞ்ச் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. அதே போன்று இந்தியாவில், மேகாலயாவின் நார்தியாங்கில் இருக்கும் புகழ்பெற்ற ஒற்றைக்கல்லைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
உலகெங்கிலும் காணப்படும் மென்ஹிர்கள் பெரும்பாலும் சமூகத்தின் முக்கிய சடங்குகளை அல்லது அம்சங்களைக் குறிக்கிறது.
வாஞ்சியாவில் இருக்கும் கற்கள் மனிதர்கள், பல்வேறு விலங்குகள் மற்றும் ஆயுதங்களின் உருவங்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு மென்ஹிர்களிலும், ஹெட் டிரெஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை அலங்கார பேண்ட் உடனும் அல்லது இல்லாமலும் மனிதனின் உருவத்தை காணலாம்.
ஹெட் டிரெஸ் அணிந்தவர்கள் ஒரு போர்வீரராக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். எதிரிகளைக் கொன்று, பெரிய விலங்குகளை வேட்டையாடிய வீரர்களைக் கௌரவிப்பதற்காக இந்த மென்ஹிர்கள் அமைக்கப்பட்டதாக நம்புகின்றனர்.
அந்த நாட்களில் அவை மிகவும் தைரியமானதாக கருதப்பட்டன. இந்த மென்ஹிர்கள் இந்த துணிச்சலான போர்வீரர்களுக்கான நினைவுக் கற்கள்.
இந்த மென்ஹிர்களிலிருந்து வெகு தொலைவில் ஒரு குகை அல்லது பாறை தங்குமிடம் உள்ளது. இந்த பாறை தங்குமிடம் உடையக்கூடிய நிலையில் இருப்பதால் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது, உள்ளே செல்ல முயற்சிக்காதீர்கள்.
தற்போது நிலையற்ற நிலையில் இருந்தாலும், ஒரு காலத்தில் இந்த பாறை தங்குமிடம், கண்காணிப்பு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கணிக்கின்றனர். செதுக்கப்பட்ட மென்ஹிர்களைப் போலல்லாமல், இந்த பாறை தங்குமிடத்தில் கலைப் படைப்புகள் எதுவும் இல்லை.
முழுமையடையாத தளங்கள் மற்றும் கல் நடைபாதை தான் இங்கு உள்ளது. இது இப்பகுதியில் உள்ள மிக முக்கியமான நதிகளில் ஒன்றான தியாவ் நதிக்கு செல்கிறது.
இந்த அமைதியான கல் கட்டமைப்புகள் குறித்து நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லவும்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust