காங்க்ரா கோட்டை Twitter
இந்தியா

இமயமலை : இங்கு இருக்கும் பிரம்மாண்ட கோட்டைக்கு ஒரு ட்ரிப் போவோமா?

முகமது கஜினி, தி கிரேட் அலெக்சாண்டர் போன்ற பல அறியப்பட்ட மன்னர்கள் இந்த அழகிய கோட்டையைக் கைப்பற்ற முயன்றனர். காரணம், கோட்டையில் நகைகளும் பொக்கிஷங்களும் நிறைந்திருக்கிறது என்ற செய்தி பல நாடுகளுக்கும் பரவியது தான்.

NewsSense Editorial Team

இமயமலையில் ஒரு பிரம்மாண்ட கோட்டை இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா?. காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள இந்தக் கோட்டை இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அரிய பல தகவல்களை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை ஆராய விரும்பும் வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயமாக இந்த கோட்டையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்ன சிறப்புமிக்கது அந்த கோட்டை? வாருங்கள் காணலாம்.

இந்தியாவில் உள்ள எல்லா கோட்டைகளுக்கும் ஒரு தனித்துவமான கதை இருக்கும். இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்க்ரா எல்லையில், தரம்சாலாவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள கண்கவரும் காங்க்ரா கோட்டையும் அப்படித்தான்.

கிபி 4ஆம் நூற்றாண்டில் கட்டோச் வம்சத்தினரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இது இமாலய ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய கோட்டை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 8 வது பெரிய கோட்டையாகவும் இது திகழ்கிறது. இந்த கோட்டையின் பரப்பளவு சுமார் 463 ஏக்கர் ஆகும்.

காங்க்ரா கோட்டையைப் பற்றிய பல சுவாரஸ்யமான வரலாறுகள் உண்டு. முகமது கஜினி, தி கிரேட் அலெக்சாண்டர் போன்ற பல அறியப்பட்ட மன்னர்கள் இந்த அழகிய கோட்டையைக் கைப்பற்ற முயன்றனர். காரணம், கோட்டையில் நகைகளும் பொக்கிஷங்களும் நிறைந்திருக்கிறது என்ற செய்தி பல நாடுகளுக்கும் பரவியது தான்.

காங்க்ரா கோட்டை

இக்கோட்டை இருபுறமும் 4 கி.மீ. சுற்றளவிற்குக் கருங்கல்லால் செய்யப்பட்ட கம்பீரமான பெரிய சுவர்களால் பாதுகாக்கப்படுகிறது. அரண்மனைக்குக் கீழே, முற்றத்தில் அம்பிகா தேவி, லக்ஷ்மி நாராயணர் மற்றும் மகாவீரர் கோவில்கள் உள்ளன. கோட்டையில் 11 வாயில்கள் மற்றும் 23 சுவர்கள் உள்ளன.

இந்த கோட்டையை அடைவதற்கு, 14 கி.மீ தொலைவில் காகல் விமான நிலையம் வந்து வரலாம். டெல்லியிலிருந்து தரம்சாலாவிற்கு விமானத்தில் சென்று, பின்னர் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து கோட்டையை அடையலாம். சுற்றுலாப் பயணிகள் டெல்லியிலிருந்து காங்க்ராவுக்கு நேரடியாகப் பேருந்திலும் செல்லலாம். இந்த இலக்கை அடைய 13 மணிநேரம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?