Dog Wedding (Rep) canva
இந்தியா

செல்ல பிராணிகளுக்கு டும் டும் டும்; பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் இணையத்தில் வைரல்!

இது பற்றி பேசிய சவிதா, தனக்கும் தன் கணவருக்கும் திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் குழந்தை இல்லை எனவும், ஸ்வீட்டியை அவர்களது குழந்தையாக வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

Keerthanaa R

நம் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய் பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அரியானாவில் இரு குடும்பத்தினர், அவர்கள் ஆசையாக வளர்த்த நாய்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. அரியானாவின் குருகிராம் என்ற நகரில், அருகருகே வசித்து வருகிறார்கள் மணிதா மற்றும் சவிதா.

மணிதா 8 வருடங்களாக ஷெரு என்ற ஆண் நாயை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் சவிதா ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களது நாய்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி 25 பத்திரிக்கை அச்சிடப்பட்டு சுமார் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரை ஆன்லைன் மூலமாகவும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.

இது பற்றி பேசிய சவிதா, தனக்கும் தன் கணவருக்கும் திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் குழந்தை இல்லை எனவும், ஸ்வீட்டியை அவர்களது குழந்தையாக வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அவர் அதிக ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

"பலரும் எங்களிடம் ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினர். நாங்களும் அதை பற்றி யோசித்து, பிறகு பாரம்பரிய முறைகளை கடைபிடித்து திருமணம் நடத்தினோம்." என்றார் சவிதா.

கெட்டி மேளம், பாடல்கள், நடனம் என திருமணம் களைக்கட்டியுள்ளது. ஹல்தி சடங்கிற்கு சுமார் 200 முதல் 300 பேர் வந்திருந்தனர் என சவிதா கூறினார். மேலும், குழந்தைகள் இல்லாததால், இது போன்ற நிகழ்வுகள் எங்கள் வீட்டில் நடக்காது என்பதால், திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தோம்" என்றார்.

குங்குமம், கொலுசு, கண் மை, நகங்களுக்கு நெயில் பாலிஷ், நகைகள் என மணப்பெண்ணை போலவே ஸ்வீட்டியை அலங்கரித்திருந்தனர் பெண் வீட்டார். செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?