ஏர் இந்தியா நிறுவனத்தின் பெண் விமானி ஜோயா அகர்வால், சான் ஃபிரான்சிஸ்கோ ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 2021ல் இவரது தலைமையிலான அனைத்து பெண் விமானிகள் குழு சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை விமானத்தை இயக்கியது. இதன் தூரம் 16,000 கிமீ. இதுவே உலகின் மிக நீண்ட வான்வழி பயணமாகும்.
இந்த சாதனையை புரிந்த முதல் இந்திய பெண் விமானி ஜோயா அகர்வாலை அங்கீகரிக்கும் வண்ணம் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள SFO ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் விமானியாக இடம்பெற்ற முதல் மனிதரும் இவர் தான் எனவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஜோயா தெரிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற ஒரே வாழும் பொருளும் இவர் தான்.
ஜோயாவின் சாதனைக்காக அவரை கௌரவித்த எஸ்எஃப்ஓ மியூசியம், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இவர் அளிக்கும் ஊக்கம், அவர்களின் வளர்ச்சிக்கு ஜோயாவின் அர்பணிப்பு, பலரையும் அவரது கனவுகளை நனவாக்கிகொள்ள உதவியுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும் "கேப்டன் ஜோயாவின் இந்த அசாதாரண சாதனையை பதிவு செய்துகொள்வதன் மூலம் எஸ்எஃப்ஓ அருங்காட்சியகம், தற்போதைய, மற்றும் அடுத்த தலைமுறை விமான ஆர்வலர்களுக்கு எடுத்துசெல்லும் ஒரு வாய்ப்பும் அமையப்பெறுவதில் பெருமைகொள்கிறது" என சான் பிரான்சிஸ்கோ ஏவியேஷன் அருங்காட்சியகத்தின் அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ.யிடம் கூறினார்.
"எஸ்எஃப்ஓ அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் இந்திய பெண் விமானி நான் தான் என என்னால் நம்ப முடியவில்லை. சாதாரணமாக, மொட்டை மாடியில் உட்கார்ந்துக் கொண்டு வானில் நட்சத்திரங்களை பார்த்து விமானியாக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்த ஒரு எட்டுவயது சிறுமியிடம் நீங்கள் கேட்டால்,
தங்கள் அருங்காட்சியகத்திற்காக ஒரு இந்தியப் பெண்ணை அமெரிக்கா அங்கீகரித்தது ஒரு கௌரவம்... இது எனக்கும் எனது நாட்டிற்கும் ஒரு சிறந்த தருணம் எனக் கூறுவாள்" என்று கேப்டன் ஜோயா கூறினார்.
கேப்டன் ஜோயா அகர்வால் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பாலின சமத்துவ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராவார்.
இந்த அருங்காட்சியகம் 1980 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் (எஸ்.எஃப்.ஓ) தொடங்கப்பட்டது. இன்றைய தேதியில், எஸ்எஃப்ஓ அருங்காட்சியகத்தில் 150,000 க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் வுமன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் உலகிலேயே அதிக பெண் விமானிகளை இந்தியா தான் கொண்டுள்ளது.
மொத்த விமானிகள் எண்ணிக்கையில், 12.4 சதவிகிதம் இந்தியாவில் பெண் விமானிகள் உள்ளனர். இது முன்னேரிய நாடான அமெரிக்காவின் 5.5 சதவிகிதத்தை விட அதிகம் தானே?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust