குரங்கு அம்மை Twitter
இந்தியா

குரங்கு அம்மை: இந்தியாவில் 5 வயது சிறுமிக்கு Monkey Pox அறிகுறிகள்?

Keerthanaa R

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, உலகம் அஞ்ச வேண்டிய சவாலாக குரங்கு அம்மை அமையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை, இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை.

குரங்கு அம்மை

ஆனால், உத்திர பிரதேசத்தின் காசியாபாத்தில், 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காய்ச்சல் தலை வலி, உடல் வலி, பின் தொடர்ந்து மூன்று நாட்களில் சிவப்பு புள்ளிகளும், அது கொப்புளங்களாக மாறும் என்று நிபுணர்கள் கூறியிருந்தார்கள். இந்த சிறுமிக்குக் காய்ச்சல், கொப்புளம், தோல் தடிப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் யாரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியிலும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை பாதிப்பால் உயிர் சேதம் ஏற்படாது என்றாலும், இந்த தொற்றால் உடல்நலம் சீர்கெடும். தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்களும், தோல் தடிப்புகளும் முழுவதும் சரியாகி புதிய தோல் உருவான பின்னரே இது மற்றவர்களுக்குப் பரவாது. அதுவரை தொற்றுக் கண்டறியப்பட்டவர்களிடமிருந்து தனித்து இருப்பது அவசியம் என்கிறது சுகாதாரத்துறை.

காசியாபாத் சிறுமிக்கும் அறிகுறிகளே இருப்பதாகவும், குரங்கு அம்மை தொற்று தான் ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படவில்லை என்பதால், மக்கள் இது குறித்து அஞ்சவேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?