முதலையின் பாதுகாப்பில் இருக்கும் அனந்தபத்மநாப கோவில் - இந்தியாவின் மர்மமான 5 கோவில்கள்  Twitter
இந்தியா

முதலையின் பாதுகாப்பில் இருந்ததா அனந்தபத்மநாப கோவில்? - இந்தியாவின் மர்மமான 5 கோவில்கள்

Priyadharshini R

வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலில் இந்தியாவில் உள்ள கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட நாடு.

ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன. இந்த பதிவில் இந்தியாவின் மர்மமான ஐந்து கோவில்கள் குறித்து பார்க்க போகிறோம்.

மெஹந்திபூர் பாலாஜி கோவில்

ராஜஸ்தானின் தௌசாவில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோயில், பூசாரிகளால் பேயோட்டுவதற்கு மிகவும் பிரபலமானது.

தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை அழைத்துகொண்டு எதிர்மறையான சக்திகளின் பிடியில் இருந்து விடுவிக்க இந்த யாத்திரைக்கு வருகிறார்கள். தீய சக்திகள் மட்டுமல்லாமல் சூனியம் அல்லது மந்திரங்கள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கவும் இந்த கோவில் பிரபலமானது.

இந்துக் கடவுளான ஹனுமானுக்கு இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனந்தபத்மநாப ஏரி கோவில்

கேரளாவில் ஒரு ஏரியின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது. அனந்தபத்மநாப சுவாமி கோவிலை ஒரு முதலை பாதுகாத்ததாக கூறப்படுகிறது. இந்த முதலை மனிதர்களுக்கு எந்த தீங்கும் விளைவித்தது இல்லையாம்.

வேட்டையாடும் விலங்கான இது சைவ உணவை உண்டு வாழ்ந்து வந்தது. பாபியா என்ற இந்த முதலை கடந்த வருடம் அக்டோபர் மாதம் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது விஷ்ணுவின் 10 அவதாரங்களை சித்தரிக்கும் கோவிலாக உள்ளது.

காமாக்யா தேவி கோவில்

காமாக்யா தேவி கோயில் இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த கோயிலாகும். இது பெண்மை மற்றும் மாதவிடாயை கொண்டாடுகிறது. இக்கோயிலின் அம்மன் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இரத்தம் சிந்துவதாக நம்பப்படுகிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளது. அம்மனின் மாதவிடாய் சுழற்சியின் போது, நீர்த்தேக்கம் சிவப்பு நிறமாக மாறும் என்றும், இந்த நேரத்தில் கோவில் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சூரிய கோவில்

ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ள சூரியன் கோவில் ஒரு கட்டிடக்கலை அதிசயம். இது நரசிம்ம மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடிவமைப்பு சூரிய ஒளியின் முதல் கதிர்கள் பிரதான நுழைவாயிலில் விழ அனுமதிக்கிறதாம்.

கைலாஷ் கோவில்

கைலாஷ் கோயில் ஒரு கட்டிடக்கலை அதிசயம். 16 ஆம் நூற்றாண்டின் எல்லோரா குகைகளில் பாறையால் வெட்டப்பட்ட கைலாஷ் கோயில் ஒரே பாறையில் கட்டப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 30 மில்லியன் சமஸ்கிருத சிற்பங்கள் இன்னும் டிகோட் செய்யப்படவில்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?