Friends Twitter
இந்தியா

நண்பர்கள் தினம் : உங்கள் நண்பர்களிடம் இந்த 5 குணங்கள் இருக்கா?

நம்முடன் நன்றாகப் பேசுபவர்கள் சிறந்த நண்பர்கள் அல்ல நம் வாழ்க்கையினை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புபவர்களே நண்பர்கள்.

Priyadharshini R

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.

நம்முடன் நன்றாகப் பேசுபவர்கள் சிறந்த நண்பர்கள் அல்ல நம் வாழ்க்கையினை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் விழுதுகளே நண்பர்கள்.

சாதாரணமாக அறிமுகமாகும் நட்பு எங்கே மலரும் என்று நமக்குத் தெரியாது நம்மை சுற்றி பலர் இருந்தாலும் உங்களுடன் பயணிக்கும் நட்பிடம் முக்கியமாக இருக்க வேண்டிய 5 குணங்களை காணலாம்.

ஆதரவு

ஒரு நண்பன் உங்களின் இன்பம்,துன்பம் ஆகிய இரண்டு நேரங்களிலும் உங்களுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமானது.

கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் பயணிக்கும் போது நண்பனின் ஆதரவும் அக்கறையும் உங்களைப் பலப்படுத்தும் . ஒரு உண்மையான நண்பர் உங்களைத் தனியாகக் கஷ்டப்பட விடமாட்டார்.

உங்களை மதிப்பிட மாட்டார்கள்

நல்ல நண்பர் நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்கலாம் , அல்லது உங்கள் முடிவுகளை ஏற்காமலும் போகலாம் ஆனால் இவற்றை வைத்து நீங்கள் இப்படித்தான் என்று ஒரு போதும் மதிப்பிட மாட்டார்கள்

உங்கள் வாழ்க்கையில் சில பேரிடம் மட்டுமே நீங்கள் இந்த அம்சத்தைக் காண முடியும். கண்டிப்பாக உங்கள் நண்பன் அதில் ஒருவராக இருப்பார்.

விசுவாசம்

இங்கு ஒவ்வொரு உறவிலும் விசுவாசம் முக்கியமானது, அதே போல் நட்பில் விஸசுவாசம் முக்கியமானது , உங்கள் நண்பர் உங்களிடம் காட்டும் விசுவாசத்தின் மூலம் உங்களைப் பாதுகாப்பாக உணர வைப்பார்.

விசுவாசமான நண்பர்கள் பாரபட்சமற்றவர்கள், அவர்கள் உங்கள் நட்பில் நிபந்தனைகளை வைப்பதில்லை.

உங்கள் கருத்துக்களைக் கேட்பவர்

சில நாட்களில் சில தருணங்களில் உங்கள் உணர்வுகளின் மூலமாக மனதில் தோன்றும் கேள்விகளைக் காது கொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும்.

உங்கள் உணர்வுகளின் மூலம் நீங்கள் பேசும் போது உங்கள் வார்த்தையின் கேட்கும் நண்பர் சிறந்தவர் ஆவார்

சிறந்த விமர்சகர்

ஒரு நல்ல நட்புக்கான அடையாளங்களில் இது முக்கியமானது விமர்சனம்.

நீங்கள் செய்யும் செயல்களை எப்போதும் ஆதரிப்பவர் உங்கள் உண்மையான நண்பராக இருக்க முடியாது. நீங்கள் செய்யும் சில செயல்களில் வரும் தவறினை சுட்டிக் காட்டும் நபராக இருப்பது முக்கியம். அப்போது உங்கள் நண்பன் வாழ்க்கையின் கண்ணாடியாக இருப்பார். விமர்சனமே நட்பாக இருக்கக் கூடாது ஆனால் நட்புக்குள் விமர்சனம் வேண்டும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?