From Jeans To Socks: How Often Should You Be Washing Your Clothes?  Twitte
இந்தியா

ஜீன்ஸ் முதல் சாக்ஸ் வரை: எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும்?

துணிகளை துவைக்காமல் இருப்பது அல்லது அரிதாக துவைப்பது மட்டுமே அந்த துணிகளுக்கு நல்லது என ‘No wash Club’ கூறுகிறது. அப்படி நாம் அணியும் சட்டை, ஜீன்ஸ், உள்ளாடை, சாக்ஸ் ஆகிய ஆடைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

Priyadharshini R

உலகம் முழுவதும் தங்களது துணிகளை துவைக்க விரும்பாத அல்லது எப்போவாவது துவைக்கவே மக்கள் விரும்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

துணிகளை குறைவாக துவைப்பதே நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக மேற்கத்திய நாடுகளில் ‘No wash Club’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துணிகளை துவைக்காமல் இருப்பது அல்லது அரிதாக துவைப்பது மட்டுமே அந்த துணிகளுக்கு நல்லது என இந்த ‘No wash Club’ கூறுகிறது.

அப்படி நாம் அணியும் சட்டை, ஜீன்ஸ், உள்ளாடை, சாக்ஸ் ஆகிய ஆடைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ் என்னதான் தடிமனாக, கணமாக இருந்தாலும் அடிக்கடி துவைத்தால் தேய்மானம் ஆகி கிழிந்துவிடும். ஒவ்வொரு 4 - 6 அணிகளுக்கும் பிறகு உங்கள் ஜீன்ஸை துவைக்க வலியுறுத்துகிறார்கள். துணிகளை வெயிலில் காயவிடுவதால் அந்த கிருமிகள் போகும்.

உள்ளாடை

அண்டர்வேர் ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் நிச்சயம் துவைக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் குடலிறக்க மடிப்புகளின் தோல் மற்றும் பிறப்புறுப்பு பகுதியின் தோலில் பல நுண்ணுயிரிகள் உள்ளன. இதனை துவைக்காமல் அணியக்கூடாது. தோல் சம்பந்தமான நோய் தொடங்கி அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு இது வழிவகுக்கும்.

சாக்ஸ்

சாக்ஸ் பாக்டீரியா மற்றும் வாசனையை விரைவாக ஈர்க்கும். எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தியவுடன் துவைப்பது அவசியம். பொதுவாக சாக்சில் இருந்து துர்நாற்றம் வரும். அதிலிருந்து விடுபட, சாக்ஸை துவைப்பதற்கு முன் உள்பக்கமாக திருப்பி துவைக்க வேண்டும்.

சட்டைகள்

சட்டைகளை உள்ளாடைக்கு பிறகே அணிகிறோம். வழக்கமான சலவை தனிப்பட்ட சுகாதாரத்திற்கு முக்கியமானது என்றாலும் ஒவ்வொரு 1-2 முறை அணிந்த பிறகு அதாவது நாம் அணியும் நேரத்தை பொறுத்து அதனை துவைக்கலாம்.

ஆனால் டி ஷர்ட்களை ஒரு முறை அணிந்த பிறகே துவைக்க வேண்டும். குறிப்பாக வெப்பமான காலநிலையில் போது நிச்சயம் துவைக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?