டெடி பேர் canva
இந்தியா

சிகரெட் துண்டுகள் கொண்டு தயாரிக்கப்படும் Teddy Bear - எப்படி ?

சிகரெட் துண்டுகளின் வெளிப்புற லேயர் மற்றும் உள்ளே இருக்கும் புகையிலை பொருட்கள் நீக்கப்படுகின்றன. அவை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் மற்றும் உரப் பொடியாக மாற்றப்படுகின்றன.

Keerthanaa R

சிகரெட் துண்டுகளை கொண்டு பொம்மைகளை செய்து வருகின்றனர் டெல்லியை சேர்ந்த பெண்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, வீசியெறியப்படும் சிகரெட் துண்டுகளை (cigarette buds) கொண்டு, டெட்டி பேர் பொம்மைகள் செய்யப்படுகிறது.

நமன் குப்தா என்ற தொழிலதிபரின் ஐடியா தான் இது. குப்பைகளோடு குப்பையாக, தெருக்களில் சாலையில் கிடக்கும் இந்த சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்படுகின்றன. அவை சுத்தம் செய்யப்பட்டு, இழைகளாக பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை பொம்மைகளுக்குள் நிறப்பப்படுகின்றன.

cigarette bud collection

முதலில் நாள் ஒன்றிற்கு 10 கிராம் சிகரெட் துண்டுகளை பயன்படுத்தி பொம்மைகள் செய்ய துவங்கியதாகவும், தற்போது ஒரு நாளைக்கு 1000 கிலோ வரை சிகரெட் துண்டுகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் நமன் குப்தா தெரிவித்தார்

"ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்ய முடிகிறது, "என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

நமனின் தொழிற்சாலை டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிகரெட் துண்டுகளின் வெளிப்புற லேயர் மற்றும் உள்ளே இருக்கும் புகையிலை பொருட்கள் நீக்கப்படுகின்றன. அவை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் மற்றும் உரப் பொடியாக மாற்றப்படுகின்றன.

Naman Gupta

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி கிட்டத்தட்ட 267 மில்லியன் மக்கள், 30 சதவீதம் பேர், புகையிலை பயன்படுத்துபவர்கள் என்றும், பொது தூய்மை தரங்கள் மிகக் குறைவாக உள்ள நகர்ப்புற தெருக்களில் இந்த சிகரெட் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முயற்சி என்கின்றனர் குப்தாவின் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?