அதானி : "பிரதமர் மோடியிடம் பர்சனல் உதவிகளை பெற முடியாது" - உலகப் பணக்காரர் ஓபன் டாக் Twitter
இந்தியா

அதானி : "பிரதமர் மோடியிடம் பர்சனல் உதவிகளை பெற முடியாது" - உலகப் பணக்காரர் ஓபன் டாக்

Antony Ajay R

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வைர வியாபாரியாக தொடங்கி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக உருவானவர் அதானி.

கடந்த சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இந்தியாவின் பாரம்பரிய நிறுவனங்களை விட அதிகமாக சொத்து சேர்த்து விட்டார் அதானி.

இதனால் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடி இவருக்கு ஆதரவு அளிப்பதே இவரது வெற்றிக்கு காரணம் என்ற விமர்சனம் அதானி குழு மீது வைக்கப்பட்டு வருகிறது.

இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் படியாக, "பிரதமர் மோடியிடம் யாரும் தனிப்பட்ட உதவிகளைப் பெற முடியாது" என்று பேசியுள்ளார் அதானி.

Gautam Adani

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "யாரும் சுய உதவிகளை ஒருபோதும் பிரதமரிடம் கேட்டுப் பெற முடியாது. தேச நலனுக்கான கொள்கைகள் குறித்து அவரிடம் பேசலாம். ஒரு கொள்கை அரசால் வகுக்கப்பட்டால் அது அனைவருக்கும் பொருந்தும். அதானி குழுமத்துக்கு மட்டுமல்ல" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் அவர், "அதானி குழுமம் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் முதலீடு செய்துள்ளது. நாங்கள் 22 மாநிலங்களில் வணிகம் செய்கிறோம். அதில் இடதுசாரி கட்சி ஆட்சி செய்யும் கேரளாவும், மம்தாவின் மேற்கு வங்கமும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திராவும், நவின் பட்நாயகின் ஒடிஷாவும் கூட அடங்கும்.

"எல்லா தலைவர்களிடமும் எங்களுக்கு நட்புறவு உள்ளது.மகிழ்ச்சியுடன் சொல்கிறேன் எந்த மாநில அரசிடமும் எங்களுக்கு பிரச்னை உண்டாவதில்லை. நானும் பிரதமரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எளிதாக இதுபோன்ற விமர்சனங்களை வைக்கின்றனர்" என இந்தியா டுடே உடனான பேட்டியில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் மீது வைக்கப்படும் இது போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், அதானி குழுமத்தின் விரைவான வளர்ச்சி பற்றிய பொறாமையில் வைக்கப்படுவது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 30 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் அவரது நிறுவனம் ராஜீவ் காந்தி காலத்தில் தொடங்கப்பட்டதாகவும், அவரது தொழில் வளர்ச்சி எந்த ஒரு தலைவருடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?