Indigo Twitter
இந்தியா

இண்டிகோ விமானத்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்ட கார் - என்ன நடந்தது? | Viral video

Priyadharshini R

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் முன் பகுதியில் கார் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பீகார் மாநிலம் பாட்னா நகருக்கு இன்று புறப்பட்டு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் முன்பகுதியில் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்று திடீரென வந்தது.

அதன்பின்னர் அந்த கார் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இண்டிகோ விமானம் அந்த வழியில் செல்ல இடையூறு ஏற்பட்டது.

அந்த இடத்திற்கு கார் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வந்தாரா எனப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் கார் ஓட்டுநர் மது அருந்தவில்லை என அதிகாரிகள் ஊடகத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை மற்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.

இதனால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இண்டிகோ விமானம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல.

Indigo airlines

கடந்த ஜூலை 28ந்தேதி இதேபோன்று ஒரு சம்பவத்தில் அசாம் விமான நிலையத்தில், கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது.

இதன்பின் விமானம் நிறுத்தப்பட்டு 6 மணிநேரம் வரை அதனை சரிசெய்ய முயன்று, தொழில் நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?