இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களில் மாவட்டம், வட்டம், கிராமம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டே மாவட்டங்களை கொண்ட மாநிலமும் அடங்கும். இரண்டு மாவட்டங்களா என யோசிக்கிறீர்களா? நீங்கள் படித்தது சரி தான். 2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலமாக கோவா உள்ளது. ஒன்று வட கோவா, மற்றொன்று தென் கோவா.
கோவா என்றவுடன் அழகிய கடற்கரைகள், சுவையான கடல் உணவுகள், பார்ட்டி இரவுகள் என நம் நினைவிற்கு வரும்.
இது எல்லாம் கோவாவில் பிரபலமாக இருந்தாலும், கோவா கலாச்சாரம், பாரம்பரியத்தின் புதையலாக இருப்பது குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
கோவாவின் வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இது வளம் மிகுந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது.
கோவா இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகும். நீண்ட காலமாக போர்த்துகீசியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த மாநிலம் 1961 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust