Gujarat: சட்டமன்ற தேர்தலின் 5 ஹாட் சீட்களும், அதன் வெற்றியாளர்களும் canva
இந்தியா

Gujarat தேர்தல்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 தொகுதிகளும், வெற்றியாளர்களும் - ஒரு பார்வை

இம்முறை 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்த தேர்தலில் ஹாட் சீட் என வரையறுக்கப்பட்ட 5 முக்கிய தொகுதிகள், மற்றும் அதில் வெற்றிப்பெற்றவர்களின் பட்டியல் இதோ!

Keerthanaa R

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

வழக்கமான வேட்பாளர்கள் அல்லாமல், சில புதிய கேண்டிடேட்களை களமிறக்கிய பாஜக, குஜராத்தில் தொடர்ந்து 8 வது முறையாக குஜராத்தில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 76 தொகுதிகளில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மூன்றாவது கட்சியான ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளைப் பெற்றது, ஆனால் ஐந்து இடங்களை மட்டுமே பெற்றது.

இம்முறை 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

இந்த தேர்தலில் ஹாட் சீட் என வரையறுக்கப்பட்ட 5 முக்கிய தொகுதிகள், மற்றும் அதில் வெற்றிப்பெற்றவர்களின் பட்டியல் இதோ!

காந்திபாய் அம்ருத்தியா

மோர்பி:

காந்திபாய் அம்ருத்தியா இந்த மோர்பி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றுளார். இவர் ஐந்து முறை பாஜக எம்எல்ஏ ஆக இருந்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் மோர்பி பாலம் விபத்துக்குள்ளானதில், 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், இந்த தொகுதியில் யார் வெற்றிப்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. 62,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வென்றுள்ளார் காந்திபால்.

ஜிக்னேஷ் மேவனி

வட்கம்:

காங்கிரஸின் ஜிக்னேஷ் மேவனி பாஜகவின் மணிபாய் ஜேதாபாய் வகேலாவை எதிர்த்து வட்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

94,765 வாக்குகள் பெற்று ஜிக்னேஷ் வெற்றிப்பெற்றார். பாஜக வேட்பாளர் மணிபாய் 89,837 வாக்குகள் பெற்றிருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மேவனி சுயேட்சை வேட்பாளராக இதே தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த மணிபாய் வகேலா, மேவானியை வெற்றி பெற வைப்பதற்காக தனது வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படது குறிப்பிடத்தக்கது.

அயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பெரா

ஜாம் கம்பாலியா:

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான இசுதன் கட்வி இந்த தோகுதியில் போட்டியிட்டார். இதனால், ஜாம் கம்பாலியா தொகுதி குஜராத் தேர்தலின் ஹாட்சீட்களில் மிக முக்கிய இடத்தை பெற்றிருந்தது.

ஆனால், இசுதன் பாஜகவின் அயர் முலுபாய் ஹர்தாஸ்பாய் பெராவிடம் 18,745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும் இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஹிர் விக்ரம்பாய் அர்ஜன்பாய் மடம் கிட்டத்தட்ட 23.53% வாக்குகளைப் (44,715) பெற்ற நிலையில், போட்டி இன்னும் சூடு பிடித்தது.

ரிவாபா ஜடேஜா

ஜாம் நகர் வடக்கு:

இந்த தொகுதியில் சுமார் 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா ஜடேஜா வெற்றிப் பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான இவர், தனது மாமனாரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான பிபேந்திர சிங் ஜடேஜாவை எதிர்த்து போட்டியிட்டார்.

தனது முதல் தேர்தலிலேயே 57.79% வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளார் ரிவாபா

ஹர்திக் படேல்

விரம்கம்:

2017 குஜராத் தேர்தலின் போது படிதர் போராட்டத்தின் முகமாக இருந்த படிதர் தலைவர் ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட இவர், 49.64% வாக்குகள், அதாவது 99,155 வாக்குகளை பெற்றார்

ஆம் ஆத்மியின் அமர்சிங் அனதாஜி தாகூர் 23.75% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸின் பார்வாட் லகாபாய் பிகாபாய் 21.39% வாக்குகளையும் பெற்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?