sandwich Pexels
இந்தியா

ஹார்ட் வடிவ சாண்ட்விச்: இணையத்தை ஷாக்காக வைத்த விசித்திர உணவு

பட்டர், ஜாம், சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட் என ஒரு விசித்திர கலவையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சாண்ட்விச் இணையதள வாசிகளை கடுப்படைய செய்துள்ளது.

Keerthanaa R

வித்தியாசமான உணவுகளை தேடி தேடி உண்பதில் நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும். இப்படி நாம் இதுவரை சுவைத்திராத உணவுகளை கண்டுபிடிக்க நமக்கொரு முக்கிய உதவியாக இருப்பது இணையதளம். ஆனால் இதே இணையதளம் தான் நாம் சாப்பிடவே கூடாது என்று நினைக்கும் சில விசித்திரமான உணவுகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

குலாப் ஜாமுன் பீட்ஸா துவங்கி மாஸா மேகி வரை, உணவு தயாரிப்பவர்கள் டெஸ்ட் செய்யாத புதிய ஐட்டங்களே இல்லை. அப்படி நினைத்துக்கொண்டிருக்கையில் வருகிறது ஒரு சாண்ட்விச்.

Gulab Jamun Pizza

பொதுவாக பிரட்டுடன் வெறும் ஜாமை தடவி சாப்பிடுவார்கள், இதுபோல் பிரெட், பட்டர், ஜாம், அல்லது டோஸ்ட் செய்யப்பட்ட பிரெட் மீது ஜாம் தடவி சாப்பிடுவதும் உண்டு. Nutella, Hershey's போன்றவற்றையும் தடவி சாக்லேட் சாண்ட்விச் சாப்பிடுவதும் வழக்கம். ஆனால் இவையெல்லாம் தனித் தனியாக தான்.

மேல் குறிப்பிட்டவை எல்லாம் சேர்த்து, இத்துடன் சீஸ் மற்றும் சாக்கோபார் ஐஸ் க்ரீமும் சேர்ந்தால் அதன் சுவை என்னவாக இருக்கும்?

Heart Sandwich

அதாவது, ஹார்ட் வடிவத்தில் வெட்டப்பட்ட பிரெட், அதன் மேல் வெண்ணை, ஜாம், துருவப்பட்ட டைரி மில்க் சாக்லேட், சீஸ், இதனுடன் இரண்டு பெரிய சாக்கோபார் ஐஸ்க்ரீம் வைத்து மூடி, இதை இரண்டாக வெட்டி தருகின்றனர்.

இந்த சாண்ட்விச்சை குஜராத்தில் ஹிதேஷ் சாண்ட்விச் என்ற ஒரு சாலையோர உணவகம் விற்கிறது. இதை "தில் வாலா சாண்ட்விச் ஃப்ரம் பாவ்நகர்" என்று சொல்கின்றனர். இணையத்தில் வைரலான இந்த சாண்ட்விச் தயாரிக்கும் வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை எப்படி சாப்பிடுவது என்பது தான் அந்த ஷாக். இதுவரை 5 லட்சம் வியூஸ் மற்றும், 536 லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவை, ஜம்மு கஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தனக்கு குஜராத்தின் உணவுகள் பிடிக்கும் என்றாலும், அதற்கென ஒரு வரையறை இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

"இதை யார் கண்டுபிடித்தனர்? இதை விற்க சரியான யுக்தி இவர்களுக்கு எப்படி தோன்றியது?" என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மனிதர்கள் உணவை வைத்து பரிசோதனைகள் செய்வது பாராட்டக்கூடியதே. ஆனால் இது கொஞ்சம் ஓவர் இல்லையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?