கர்நாடகாவில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய (PU) தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
இல்ஹாம் என்ற அந்த பெண் பொதுத் தேர்வு எழுதும் நாட்களில் கர்நாடகாவில் தீவிரமாக ஹிஜாப் தொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் பொதுத் தேர்வில் அந்த பெண், அறிவியல் பிரிவில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
மங்களூருவில் உள்ள புனித அலாய்ஷியஸ் பள்ளியைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவ உளவியல் படிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அதே பள்ளியைச் சேர்ந்த அனிஷா மல்யா என்ற பெண் வணிகவியல் பிரிவில் 595 மதிப்பெண்கள் மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
"நான் மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்திருப்பதாக என் உறவினர்கள் போன்செய்த போது என்னால் நம்பமுடியவில்லை. 600 -க்கு 597 மதிப்பெண்கள் எடுத்தது பெருமகிழ்ச்சியாக இருந்தது" எனக்கூறினார் இல்ஹாம். இவரது தந்தை முகமது ரஃபீக் ஒரு கடையின் மேனேஜராக உள்ளார். தாய் மொய்சதுல் குப்ரா வீட்டைப் பார்த்துக்கொள்கிறார்.
முன்னதாக கர்நாடக அரசு இஸ்லாமிய மாணவிகள் புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரக் கூடாது என அறிவித்தது. இது தங்களது உரிமைகளை பாதிப்பதாக மாணவிகள் கருதினர்.
தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன. ஹிஜாப் அணியும் மாணவர்கள் பள்ளிகளில் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களில் இல்ஹானும் ஒருவர்.
தேர்வு எழுதும் நிலையங்களிலும் இஸ்லாமிய ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இவற்றையெல்லாம் கடந்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற இல்ஹான், "அது மிகவும் கடினமான நேரம். எனினும் என் கவனம் படிப்பில் இருந்தது. எனது சிந்தனை தெளிவாக இருந்தது" எனக் கூறினார்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பளித்தது. அதன் படி இஸ்லாம் மாணவிகள் தங்கள் சீறுடைக்கு மேல் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.
ஹிஜாப் ஒரு கட்டாயமான மத நடைமுறை அல்ல எனவும் ஹிஜாப் மீதான தடையை நீக்குவதற்கு தகுந்த காரணம் எதுவும் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியது. மாணவிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust