ஆயுஷ் குரானா Twitter
இந்தியா

ஆயுஷ்மான் குரானா : "தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்" - தமிழ் பெருமை பேசிய இந்தி நடிகர்

"உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இந்தியைப் போற்றுபவர்கள் இதனை உணர வேண்டும். இந்தியாவில் அதிகமாகப் பேசப்படுவது இந்தி மொழியாக இருந்தாலும் அதனைப் பேசத்தெரியாதவர்களிடம் திணிக்கக்கூடாது"

Antony Ajay R

அமித் ஷா என்ன கூறினார்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாட்டில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இரண்டு மாநிலத்தவர்கள் பேசிக்கொள்ளும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்.” எனப் பேசியது சர்ச்சை கிளப்பியது. இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழிப்பது என்பது மாநில மொழிகளை மறைமுகமாக நசுக்குவதும். இந்தியைத் திணிப்பதுமாகும் என அரசியல் தலைவர்கள் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்தி திணிப்பு என்பது ஏறத்தாழ நூற்றாண்டு காலமாக மற்ற மொழி பேசும் மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். தமிழகத்தில் மட்டும் இரண்டு மொழிப் போர்களில் பல போராளிகள் உயிர் நீத்திருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னதாக புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொண்டது. அதாவது இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியும் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி, ஆங்கிலத்துடன் வேறு ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கலாம் என்று அந்த கொள்கை கூறியது. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது ஒரு முன்னணி இந்தி நடிகர் இந்தி பேசாத மாநிலங்களின் பக்கம் நின்று அம்மக்களுக்காகப் பேசினார். அவர் தான் அயுஷ் குரானா. ஆயுஷ் குரானாவின் கருத்து இப்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

2019ம் ஆண்டும் ஆயுஷ் குரானா பேசியதாவது, “'இந்தி மொழியில் பெர்சியம் மற்றும் அரேபிய மொழியின் தாக்கம் இருப்பதை நெஞ்சை நிமிர்த்தி இந்தி தேசியம் பேசுபவர்கள் உணர வேண்டும். தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால் திராவிட மொழிகளைத் தான் பேச வேண்டும். அவை தான் வேற்றுமொழி கலப்பில்லாத மொழிகள்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இந்தியைப் போற்றுபவர்கள் இதனை எளிதாக உணர வேண்டும். இந்தியாவில் அதிகமாகப் பேசப்படுவது இந்தி மொழியாக இருந்தாலும் அதனைப் பேசத்தெரியாதவர்களிடம் திணிக்கக்கூடாது. இப்படிச் சொல்லும் நானும் ஒரு இந்தி மொழி விரும்பி தான்’ எனப் பேசியிருந்தார் ஆயுஷ் குரானா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?