“அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியைப் பயன்படுத்தப் பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் அம்மொழியின் முக்கியத்துவம் கூடும். அமைச்சரவையின் செயல்பாடுகள் 70% இந்தி மொழியிலேயே இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியைப் பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும்போது, பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை பயன்படுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார் அமித்ஷா. இதற்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதள வாசிகளும் இந்திக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.