Adam Harry Twitter
இந்தியா

இந்தியாவின் முதல் திருநம்பி விமானியாக ஆவாரா ஆடம் ஹாரி? - ஒரு போராட்ட கதை

விமானி ஆகும் கனவு நனவாகவில்லை. 2020 ஆண்டு மருத்துவ சோதனை செய்த போது, ஆடம் ஹார்மோன் தெரபி சிகிச்சையில் இருந்ததால், பறப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறப்பட்டது.

Priyadharshini R

கேரளாவைச் சேர்ந்த ஆடம் ஹாரி தனது 11 வயதில் முதன்முதலாக விமானத்தில் பயணித்துள்ளார். அந்த விமான பயணத்தின் அனுபவமே அவர் ஒரு விமானியாக வேண்டும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

ஆடமின் கனவை நனவாக்க அவரது குடும்பம் அப்போது உறுதுணையாக நின்றது. ஆடம் ஹாரி தென்னாப்ரிக்காவில் உள்ள விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மாதந்தோறும் குடும்பத்தினர் பணம் அனுப்பி வந்தனர்.

ஒரு கட்டத்தில், ஆடமிற்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டது அவரது குடும்பம். அதற்கு காரணம் அவர் படிப்பின் பாதியிலேயே ஒரு மூன்றாம் பாலினத்தவராக மாறினார்.

இதுகுறித்து ஆடம் பேசியபோது,

"நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ள என் குடும்பம் தயாராக இல்லை" என்றார்.

Adam Harry

மாற்றுப்பாலின மக்கள்

இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் மாற்றுப்பாலின மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா பாலினத்தை சேர்ந்தவர்கள் போலவே இவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்று 2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் கூறியது.

ஆனாலும், கல்வி, மருத்துவம், வேலை இவற்றைப் பெறுவதில் அவர்கள் படும் சிரமம் தொடர்ந்துகொண்டே தான் உள்ளது.

சமூகத்தின் எதிர்பாலும், சில தவறான புரிதல்களாலும் இது போன்று பலர் அவர்களது வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகின்றனர்.

குடும்ப உதவியுடன் தொடங்கிய ஆடம் ஹாரியின், விமானி ஆக வேண்டும் என்ற கனவும் பாதிலேயே திசைமாறியது.

Adam Harry

வணிக விமானி உரிமம்

தென்னாப்ரிக்காவில் படித்தபோது, தனிநபர் விமானிக்கான உரிமத்தை அவர் பெற்றிருந்த போதிலும் குடும்ப உதவி இல்லாமல் முழுமையாக அந்த படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உருவானது.

அதன்பின்னர் ஆடம் மீண்டும் தன் வீட்டிற்கே திரும்பினார், ஒரு உள்ளூர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கேரள அரசின் நிதியுதவியுடன் வணிக விமானி உரிமத்தை ஆடம் ஹாரி பெற்றார்.

Adam Harry

ஹார்மோன் சிகிச்சை

அதற்கு பிறகும் விமானி ஆகும் கனவு நனவாகவில்லை. 2020 ஆண்டு மருத்துவ சோதனை செய்த போது, ஆடம் ஹார்மோன் தெரபி சிகிச்சையில் இருந்ததால், பறப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.

ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனம் இவரிடம் மேற்கொண்ட மருத்துவ சோதனை அறிக்கையின்படி, ஹார்மோன் சிகிச்சைக்கான மருந்துகளை உட்கொள்ளும் வரை ஆடம் ஜெண்டர் டிஸ்ஃபோரியா எனும் மனநல பிரச்னையால் கஷ்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பாலின அடையாளத்துக்கும் மாறுதலாகும் பாலினத்துக்கும் இடையிலான பொருத்தமின்மையால் வரும் மனஅழுத்தம் மற்றும் கோபத்தை அவர் எதிர்க்கொள்ள நேரிடும்.

இந்த மருந்துகளை எடுத்துகொள்வதை நிறுத்திய பிறகே இவர் மீண்டும் சோதனைக்கான கோரிக்கையை வைக்க முடியும் என்றும் இவருக்கு சொல்லப்பட்டது.

Adam Harry

இந்த மருந்துகளை அவர் வாழ் நாள் முழுக்க உட்கொள்ள வேண்டும் என்று ஹார்மோன் நிபுணர் கூறியுள்ளார்.

இதன்பிறகு சில மாதங்களுக்கு இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டு தனக்கு கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியதாக ஆடம் கூறுகிறார்.

பாலின மாற்றத்திற்கும், கனவுக்கும் இடையே நான் போராடிக்கொண்டிருகின்றேன் என்கிறார் ஆடம்.

Adam Harry

விமானி கனவு

ஏராளமான விமானிகள் இந்த உலகத்தில் தங்களின் சொந்த பாலின அடையாளத்துடன் பணியாற்றி வருகின்றனர். நான் தென்னாப்பிரிக்காவின் விமானப்போக்குவரத்துறையின் இரண்டாம் நிலை மருத்துவச் சான்றும் பெற்றுள்ளேன்.

உடல் ரீதியிலான மாற்றத்தினாலோ, மருத்துவ சிகிச்சையிலிருந்தோ அவர்கள் தடுக்கவில்லை" என்கிறார் ஆடம்.

தற்போது மாற்றுப்பாலினத்தவர் என்ற பெயரை பதிவு செய்து கொண்ட பிறகு மீண்டும் மருத்துவ சோதனை செய்யுமாறு விமானப் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் மாற்றுப்பாலின விமானிகளுக்கென தனித்த வழிமுறைகள் எதுவும் இதுவரை இல்லை. ஒருவேளை, ஆடம் இந்த சோதனையில் வென்று சாதித்து காட்டினால், இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின விமானியாக ஆடம் இருப்பார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?