உங்கள் ஆதாரை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்? Twitter
இந்தியா

உங்கள் ஆதாரை எத்தனை முறை புதுப்பிக்க முடியும்?

Priyadharshini R

ஆதார் அட்டை, இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய பிரதானமான ஆவணமாக மாறிவிட்டது. அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் அட்டையே முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.

ஆதாரில் கொடுக்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் பல தளங்களில் சரிபார்ப்புச் செயலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வங்கிக் கணக்கை தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது முதல் ஐடிஆர் தாக்கல் செய்வது வரை அனைத்திற்கும் உங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

மானியங்கள், ஓய்வூதியங்கள் அல்லது உதவித்தொகை போன்ற பல அரசு திட்டங்கள் மற்றும் பலன்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட ஆதாரை வைத்திருப்பதன் மூலம், இந்த பலன்களைப் பெறலாம். உங்கள் ஆதார் தரவை எத்தனை முறை புதுப்பிக்க முடியும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பெயர்

இரண்டு முறை ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம். இது திருமணம் அல்லது பத்திரப்பதிவு மூலம் பெயர் மாற்றம் போன்ற சூழ்நிலைகளுக்கு உதவுகிறது.

பாலினம்

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்றமுடியும்.

பிறந்த தேதி

உங்கள் பிறந்த தேதிக்கு புதுப்பிப்புகள் தேவையில்லை. இருப்பினும், பதிவு செய்யும் போது தவறு ஏற்பட்டால், அதை ஒருமுறை புதுப்பிக்கலாம்.

முகவரி

பெயர் மற்றும் பிறந்த தேதியைப் போலன்றி, உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியைப் புதுப்பிப்பதற்கு வரம்பு இல்லை. உங்கள் குடியிருப்புகளை மாற்றும் போது, ​​ஆதாரில் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?