How To Check Aadhaar Card Usage History To Avoid Frauds Twitter
இந்தியா

உங்கள் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துகிறார்களா? எப்படி தெரிந்துகொள்ளலாம்?

ஆதார் அட்டை பயன்பாடு குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதாக இருந்தால், அதனை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

Priyadharshini R

ஆதார் அட்டை, இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய பிரதானமான ஆவணமாக மாறிவிட்டது. அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் அட்டையே முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.

ஆதாரில் கொடுக்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் பல தளங்களில் சரிபார்ப்புச் செயலாகப் பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கை தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது முதல் ஐடிஆர் தாக்கல் செய்வது வரை அனைத்திற்கும் உங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

உங்கள் ஆதார் எண் பல வழிகளில் பகிரப்படுகிறது. சில சமயங்களில் அது தவறான பயன்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

இதனால், ஆதார் அட்டை பயன்பாடு குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதாக இருந்தால், அதனை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

உங்கள் ஆதார் அட்டையின் பயன்பாட்டை தெரிந்துகொள்ளும் வசதியை UIDAI வழங்குகிறது, இந்த தளத்துக்கு சென்று நீங்கள், உங்கள் ஆதார் அட்டை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ஆதார் அட்டையின் பயன்பாட்டை எப்படி தெரிந்துகொள்ளலாம்?

முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in க்குச் செல்லவும்.

இங்கே My Aadhaar விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் சேவைகள் விருப்பத்திற்கு கீழே, ஆதார் அங்கீகார வரலாற்றைத் (Aadhaar Authentication History) தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். இதனை செய்தவுடன், மெனுவிலிருந்து OTP -ஐ உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்போது, ஆதாரில் இருக்கும் மொபைலுக்கு OTP வரும். அந்த OTP யை ஆன்லைனில் கேட்கும் இடத்தில் பதிவிட வேண்டும்.

இதனை நீங்கள் செய்தவுடன் உங்கள் ஆதார் எண்ணின் வரலாறு திரையில் தெரியும்.

ஏதேனும் தவறான தகவல்களைக் கண்டால் உடனடியாக ஆதார் மையத்தைப் பார்வையிடவும். உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் அசாதாரணங்களைக் கண்டறிந்தால், 1947 என்ற கட்டணமில்லா எண்ணில் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் UIDAI ஐ விரைவில் தொடர்பு கொள்ளவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?