How to check SIM cards registered on your Aadhaar card canva
இந்தியா

10 சிம் கார்டுகள் வைத்திருந்தால் ரூ.2 லட்சம் அபராதமா!

Priyadharshini R

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சண்டிகர் பெண் ஒருவர் சிம்கார்டு மோசடியில் ரூ.80 லட்சத்தை இழந்திருக்கிறார். தனது ஆதார் அட்டைக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டு சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

போலிஸ் அதிகாரி போல் அவருக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது . பாதிக்கப்பட்டவர், பயந்து, அழைப்பாளரின் கோரிக்கையை ஏற்று பணத்தை மாற்றியிருக்கிறார். தொலைத்தொடர்புத் துறை (DoT) வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயனர் ஒரு ஐடியில் ஒன்பது மொபைல் எண்கள் வரை பெறலாம்.

மற்றவர்களின் ஆதார் தகவல்களை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒரு ஆதார் அட்டையில் எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்க, மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAF-COP) என்ற ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் பெயரில் உள்ள எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

2023ம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், ₹2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?