விராட் கோலி டிவிட்டர்
இந்தியா

IndvsPak: கோலியின் ஆட்டத்தால் 1 மணி நேரம் சரிந்த UPI பரிவர்த்தனை! நிபுணர் பகிர்வு வைரல்

Keerthanaa R

கடந்த ஞாயிற்றுகிழமை பாகிஸ்தானுக்கு எதிராக கோலியின் ஆட்டத்தின்போது சுமார் 1 மணி நேரம் UPI பரிவர்த்தனைகள் சரிந்துள்ளது. இதனால் தீபாவளி ஷாப்பிங் பாதித்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணி ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்த போட்டியாக இது இருந்தது. கடந்த டி20 தொடரில் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. மேலும் அந்த டி20 தொடரில் லீக் ஸ்டேஜிலேயே இந்திய அணி வெளியேறியது, ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதனால், அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது இந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

இந்நிலையில், ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியின் போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் சரிந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை யூபிஐ பரிவர்த்தனைகளில் தோன்றிய சரிவை மிஹிர் வோரா என்ற முதலீடு நிபுணர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பவுலிங் தேர்வு செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் கைக்கொடுக்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வலையில் அடுத்தடுத்து சரிந்தது பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டர். 20 ஓவர் முடிவில் 158 ரன்களை குவித்திருந்தது பாகிஸ்தான்.

மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. அதற்கு முன்னர் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை பாரத் பே மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து தீபாவளி ஷாப்பிங் செய்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில் போட்டி ஆரம்பம் ஆனது முதல் ஆன்லைன் பரிவர்த்தனைகள் சரியத் தொடங்கியுள்ளது. அப்போது பரிவர்த்தனையின் சதவிகிதம் 6 ஆக இருந்துள்ளது. பாகிஸ்தான் பேட்டிங் முடிந்ததும் சாதாரண நிலைமைக்கு திரும்பியது.

மீண்டும் 3.30 மணியளவில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியதும் யூபிஐ பரிவர்த்தனைகள் குறைந்தது. இந்திய அணியும் ஆரம்பத்தில் தடுமாறியதில் ஆட்டத்தின் சுவாரஸ்யம் அதிகரித்தது. பின்னர் இணைந்த கோலி, ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணிக்கு 28 ரன்கள் தேவை என்று இருந்தது.

கோலி களத்தில் இருக்க, ஒரு மணி நேரம் யூபிஐ பரிவர்த்தனைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பும், கோலியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவும் யூபிஐ பரிவர்த்தனைகள் நின்றுள்ளது. மாலை 4.45 மணிக்கு மைனஸ்(-) 6 முதல் மைனஸ் 20 சதவிகிதமாக குறைந்தது பரிவர்த்தனைகள். கிட்ட தட்ட 5.30 மணி வரை இதே நிலை தொடர்ந்துள்ளது.

கடைசி ஒவர் கடைசி பந்து வரை சென்ற ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல், 53 பந்துகளில் 82 ரன் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தடை வரலாறு காணாத நிகழ்வு என்றுக் கூறி முதலீட்டு துறை நிபுணர் ஆன மிஹிர் வோரா டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு மேட்ச் முடிந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்பியது எனவும் கூறிய அவர், பரிவர்த்தனை சரிவின் கிராஃபை பகிர்ந்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?