மனைவியை தோளில் சுமந்த கணவர்
மனைவியை தோளில் சுமந்த கணவர் Twitter
இந்தியா

மனைவியை தோளில் சுமந்தபடி திருப்பதி சென்ற கணவர் - இணையத்தை கவர்ந்த காதல் ஜோடி | Video

Keerthanaa R

மனைவியை தோளில் சுமந்துகொண்டு திருப்பதியில் படியேறியே சென்றுள்ளார் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் இந்த ஜோடியின் காதலை கண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோனியத்தை அவர்கள் பல விதங்களில் வெளிப்படுத்துவார்கள். அன்பின் வெளிபாடுகளில் ஒன்று, கணவன் மனைவியை தன் தோள்களின் மேல் சுமந்து செல்வது.

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கூட ஷாருக் கான் தன் மனைவி தீபிகா படுக்கோனை தோளில் சுமந்தபடி கோவில் படியேறி செல்வார். இத்தனைக்கும் அவர்கள் தம்பதி என்று அந்த படத்தில் பொய் தான் சொல்லியிருப்பார்கள்!

இதேபோல் கிழக்கு கோதாவரியை சேர்ந்த சத்தி பாபு என்ற நபர் அவரது மனைவி லாவண்யாவை தோளின் மேல் சுமந்து திருப்பதி மலையேறி இருக்கிறார்.

பேச்சுவாக்கில் லாவண்யா கணவர் சத்தி பாபுவிடம் தன்னை தோள் மீது சுமந்து திருமலைக்கு கூட்டி செல்லும்படி சவால் விட்டுள்ளார். சவாலை ஏற்றுக்கொண்ட சத்தி பாபுவும் லாவண்யாவை தன் தோள்களின் மேல் அமர வைத்து, படியேறி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இதனை அங்கு வந்திருந்த மற்ற பக்தர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அந்த காட்சி பலரது மனதை கவர்ந்துள்ளது.

இணையவாசிகளும், அங்கிருந்த மற்ற ஜனங்களும், சத்தி பாபு - லாவண்யா இடையேயான காதலை பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். இந்த காதல் கணவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?