நிர்மலா சீதாராமன்: "ரூபாய் சரியவில்லை, டாலர்தான் உயர்கிறது"- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Twitter
இந்தியா

நிர்மலா சீதாராமன்: "ரூபாய் சரியவில்லை, டாலர்தான் உயர்கிறது"- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Antony Ajay R

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ந்துள்ள நிலையில் இது குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், "இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவதாக நான் பார்க்கவில்லை டாலரின் மதிப்பு உயருவதாக பார்க்கிறேன் " எனக் கூறியுள்ளார்.

நிதியமைச்சரின் இந்த கூற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவரிடம் இந்திய நாணயத்தின் மதிப்பு சரிவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்திய நாணயத்தின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயருவதாக பார்க்கிறன்.

எல்லா நாணயங்களும் அமெரிக்க டாலருக்கு எதிராக செயல்படுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளை விட இந்திய ரூபாய் சிறப்பாக செயலாற்றுகிறது.

இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பானதாக இருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பண வீக்கம் கட்டுப்படுத்தும், அளவு தான் இருக்கிறது என்று நான் கூறி வருகிறேன்" எனப் பேசினார்.

இந்தியப் பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்றவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஆனால் நிதியமைச்சர் இவை குறித்து அந்த மாநாட்டில் பேசவில்லை.

வரலாற்றில் இல்லாத அளவு ஒரு டாலரின் மதிப்பு 82.42 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது ரூபாய் மதிப்பு பல மடங்கு சரிந்துள்ளதைக் காட்டுகிறது.

இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

இந்த நிலையில் நிதியமைச்சரின் பேச்சு வைரலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?