டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 20க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாடு 2023, நாட்டின் சுற்றுலா துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது எனலாம்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைச் சேர்ந்த நாட்டின் தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்த உயர்மட்ட நிகழ்வு, சர்வதேச கூட்டங்களை நடத்தும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா துறைக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தியா உச்சிமாநாட்டை நடத்துவதால், பல நாடுகளின் தலைவர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சர்வதேச பார்வையாளர்களின் கவனம் நம் நாடு மீதுவிழும்.
"இந்த வருகையால், தொழில்துறைகள் தங்களின் திறமைக்கு ஏற்றவாறு விரிவடையும், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட சேவைகளுக்கு வழிவகுக்கும்" என்று பிரைட்சன் டிராவல் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் இயக்குனர் சந்தீப் அரோரா கூறுகிறார்.
குறிப்பாக ஜி 20 உச்சிமாநாட்டால் இந்தியா முக்கியமான சுற்றுலா தலமாக உருவெடுக்கும்.
உச்சிமாநாட்டின் போது வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாற்று அடையாளங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக தங்கள் தங்கும் காலத்தை நீட்டிக்கலாம், இது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று அரோரா கூறுகிறார்.
இந்தியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாடு 2023, நாட்டின் சுற்றுலா துறையில் பன்முக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பார்வையை அதிகரிக்கும் அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான சவால்களையும் இது முன்வைக்கிறது என்கிறார் அரோரா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp