முகமது சித்தி மற்றும் முகமது ஹபீப்

 

Twitter

இந்தியா

Morning News Wrap : 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அண்ணன் தம்பி - முக்கிய செய்திகள்

வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.

Antony Ajay R

74 ஆண்டுகள் கழித்துச் சந்தித்துக்கொண்ட அண்ணன் தம்பி

1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது கைக்குழந்தையாக இருந்த முகமது சித்தி பாகிஸ்தானில் உள்ள பைசாபாத்துக்கும், அவரது அண்ணன் முகமது ஹபீப் பஞ்சாபிலும் வசித்து வந்தனர்.

இருவருடைய உறவினர்களும் சமூக வக்லைதளங்களின் மூலம் இருவருடைய இருப்பிடங்களை அறிந்து இருவரும் சந்தித்துக்கொள்ளத் திட்டமிட்டனர். அதன் படி, பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா-வில் இருவரும் சந்தித்தனர். 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவரை ஒரு கட்டியணைத்து கண்கலங்கினர்

சாய்னா, சித்தார்த்

“சித்தார்த்தை கடவுள் ஆசீர்வதிப்பாராக”

சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வழியில் ரத்து செய்யப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தைப் பிரதமருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவால் “ஒரு நாட்டின் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை எனில், அந்த நாடு தன்னை தானே பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பஞ்சாபில் பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என ட்விட் செய்திருந்தார். இதனை ரீ ட்விட் செய்த நடிகர் சித்தார்த் சாய்னாவைக் கேலியாகச் சாடியிருந்தார். சித்தார்த்தின் கேலி பேச்சில் ஆபாசமாகப் பொருட்படும் வார்த்தை இருப்பதாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உட்படப் பலர் அவரை திட்டி பதிவிடத் தொடங்கினர். இதன் பிறகு சித்தார்த் தான் ஆபாசமாக எதுவும் கூறவில்லை "ஒரு குறிப்பாக தான் பயன்படுத்தினேன்" என விளக்கம் அளித்தார். சாய்னாவின் கணவரான பாருபள்ளி காசியப், “உங்கள் கருத்துக்களைச் சொல்ல நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்” என அவரது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி மத்திய அமைச்சர் வரை அனைவரும் கண்டனக்குரல் எழுப்ப, "நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்" என சித்தார்த் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்ட"சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை. அன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்துத் தாக்கக் கூடாது. சித்தார்த் உடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி

INDvsSA : 3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டனர். உமேஷ் யாதவ் மற்றும் பும்ராவின் பந்துகளில் போல்ட் தெறித்தது. எனினும் தென்னாப்பிரிக்க அணியில் பீட்டர்சன் மட்டும் பொறுப்பாக விளையாடி 72 ரன்களை குவித்தார். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்கா அணியை 210 ரன்களில் மடக்கி 13 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய அணி. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு

இரண்டு மடங்கு விண்ணப்பங்கள் - ஜல்லிக்கட்டு முன்பதிவு


மதுரையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு நடைபெற்று வந்தது. பல கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற இருப்பதனால். ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அரசு திட்டமிட்டிருந்தது.

நேற்று மாலை 5 மணியுடன் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், 4 ஆயிரத்து 534 காளைகள் மற்றும் ஆயிரத்து 999 மாடு பிடி வீரர்கள் என மொத்தம் 6ஆயிரத்து 533 பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திட்டமிட்ட நபர்களின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரை முருகன்

தமிழக அமைச்சரவையில் புதிய துறை


தமிழக அரசின் துறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இயற்கை வளத்துறை எனும் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்துத் துறையானது தொழில்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமானது தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட இயற்கைவளத் துறைக்குத் தொழில் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நீர் வளத் துறை அமைச்சர் துரை முருகன் இந்த துறையைக் கவனிப்பார் எனவும் கூறப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?