யம தர்மராஜாவுக்காக கட்டப்பட்ட கோவில் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கு இருக்கிறது? Twitter
இந்தியா

யம தர்மராஜாவுக்காக கட்டப்பட்ட கோவில் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கு இருக்கிறது?

தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களை தான் நாம் பார்த்திருப்போம், வணங்கியிருப்போம். மரணத்தின் கடவுள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த கோவில் குறித்து விரிவாக இந்த பதிவில் விரிவாக படிக்கலாம்.

Priyadharshini R

இந்தியா சிறந்த வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்ட அழகிய கோவில்களுக்கு பெயர் பெற்றது. தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களை தான் நாம் பார்த்திருப்போம், வணங்கியிருப்போம்.

மரணத்தின் கடவுள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரியாக தான் படித்தீர்கள், தெலுங்கானாவில் தான் இந்த கோவில் உள்ளது. அந்த கோவில் குறித்து விரிவாக இந்த பதிவில் விரிவாக படிக்கலாம்.

தெலுங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி என்ற கிராமத்தில் தான் இந்த கோவில் உள்ளது. இது யம தர்ம ராஜா கோவில் என்று அழைக்கப்படுகிறது.

யம தர்ம ராஜா கோயிலுக்குச் சென்ற பிறகு, அங்கு புகழ் பெற்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி தேவஸ்தானத்திற்குச் செல்வது வழக்கம். இக்கோயிலுக்குச் சென்றால், உடல், மனத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நீண்ட ஆயுளைப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் இரண்டாம் நாள் அனுசரிக்கப்படும் யம துவிதியிலும், கோடை காலத்தில் வரும் பரணி நட்சத்திரத்திலும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

நம்பிக்கையின்படி, இந்த நாளில் யமன் தனது சகோதரி யமுனா தேவியின் வீட்டிற்கு மதிய உணவிற்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

புராணங்களின்படி, யம தர்மராஜா தனது சகோதரிக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். இந்நாளில் இறைவனை வழிபடுபவர்கள் நரகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்றும், அவர்கள் அனைத்து துக்கங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்றும் யம பகவான் வாக்குறுதி அளித்தார்.

எனவே, தீபாவளியின் இரண்டாவது நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களை மதிய உணவிற்கு அழைத்து, 'பாய் தூஜ்' என்று அழைக்கப்படும் உணவை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த விழாக்களுக்கு கோயில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து அபிஷேகம், ஆரத்தி போன்ற சிறப்பு பூஜைகளை நடத்துகிறது.

யம தர்ம ராஜுவுக்கு மந்திர புஷ்பம் மற்றும் ருத்ராபிஷேகம் போன்ற பிரார்த்தனைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்கள்.

ஆயுஷ் சுக்த ஹோமம் பக்தர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் தடைகள் ஏற்படாமல் இருக்க யம தர்மராஜாவை கந்த தீபம் (எண்ணெய் தீபம்) ஏற்றி வழிபடுகிறார்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் யமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில் உள்ளது, அதன் பெயர் தர்மேஷ்வர் மகாதேவ் கோவில்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?