பாஜகவை எதிர்க்க இந்தியா முழுவதும் உள்ள 26 எதிர்கட்சிகள் இணைந்து INDIA என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
மத்தியில் ஆளும் அரசான பாஜகவை எதிர்க்க எதிர்கட்சி தலைவர்கள் இணைந்து பாட்னா மற்றும் பெங்களூரில் சந்திப்புகளை நடத்தினர்.
3வது சந்திப்பும் விரைவில் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா, "இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்தல் வெற்றிக்கு பிறகு அறிவிக்கப்படுவார்." எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பர்" என்றும் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பொதுமக்களிடமும் இருக்கும் கேள்வியாகும். ராகுல் காந்தியா அல்லது பிற காங்கிரஸ் தலைவர்களில் யாருமா? கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பல கணிப்புகள் எழுந்திருக்கின்றன.
மேலும் பேசிய புனியா, "அமேதியில் ஸ்மிருதி இரானி நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார்" என்றும் பேசினார்.
"2024ல் காங்கிரஸ் கட்சி அல்லது இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஸ்மிருதி இரானியைத் தோற்கடிப்பார்." என்றார் பி.எல்.புனியா.
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக விளங்கியது. ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2024கிலும் ராகுல் மற்றும் ஸ்மிருதி இரானி இடையில் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp