National Flag Twitter
இந்தியா

சுதந்திர தினம் : இந்தியாவின் மூவர்ண கொடி எப்படி வந்தது தெரியுமா?

உண்மையில் முதன் முதலாக இந்தியாவின் தேசியக் கொடி என பயன்படுத்தப்பட்ட கொடியில் இப்போது இருக்கும் மூன்று நிறங்களும் இல்லை, அசோக சக்கரமும் இல்லை.

Keerthanaa R

இன்று 76வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். தேசம் முழுவதும் எல்லாரது வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி, சுதந்திர தின அமுத பெருவிழா பின்பற்றப்பட்டு வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் இந்த மூவர்ணக்கொடி எப்படி வந்தது என தெரியுமா?

உண்மையில் முதன் முதலாக இந்தியாவின் தேசியக் கொடி என பயன்படுத்தப்பட்ட கொடியில் இப்போது இருக்கும் மூன்று நிறங்களும் இல்லை, அசோக சக்கரமும் இல்லை.

நிவேதிதை வடிவமைத்த கொடி:

முதன்முதலில் 1904ல் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடர், சகோதரி நிவேதிதை ( Niveditha ) தான் வடிவமைத்தார். இந்த கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டிருந்தது. இதன் மத்தியில் 'வஜ்ரா', (கடவுள் விஷ்ணுவின் ஆயுதம்) வரையப்பட்டிருந்தது. மேலும் கொடியின் இரு புறத்திலும் பெங்காலி மொழியில் வந்தே மாதரம் என எழுதப்பட்டிருந்தது

முதல் மூவர்ண கொடி:

1906ல் கொல்கத்தாவின் பார்சி பேகன் என்ற இடத்தில், தேசிய கொடியின் அடுத்த வடிவம் பிறந்தது. முதன் முதலில் கொல்கத்தாவின் கிரீஷ் பார்க் என்ற இடத்தில் இந்த கொடி ஏற்றப்பட்டது. இதில் சம பாகமாக, மூன்று நிறங்கள், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகியவை இருந்தது. இந்த கொடியில் மேலே பச்சை நிறமும், அதில் 8 தாமரை மலர்கள் வரையப்பட்டிருந்தது.

இதில் வந்தே மாதரம் என்ற வாசகத்தை தேவநாகரி மொழியில் எழுதியிருந்தனர். மேலும் இதன் சிவப்பு நிறம் இருந்த இடத்தில் பிறைச் சந்திரனும், சூரியனும் வரைப்பட்டிருந்தது.

இதே வருடத்தில் வடிவமைக்கப்பட்ட மற்றொரு கொடியான காமா கொடியில் சாஃப்ரன் (காவி), மஞ்சள் மற்றும் மூன்றாவதாகப் பச்சை நிறம், முன்பிருந்த 8 தாமரைகளுக்கு பதிலாக சூரியன்கள் வரையப்பட்டிருந்தது. இந்த கொடியின் மஞ்சள் நிறத்தில் வந்தே மாதரம் என்று எழுதப்பட்டிருந்தது.

அன்னி பெசண்ட் மற்றும் பால கங்காதர திலகர் பயன்படுத்திய கொடி:

1917ல் இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் வந்திருந்த போது அன்னி பெசண்ட் மற்றும் பால கங்காதர திலகர் ஒரு கொடியை பயன்படுத்தினர். இதில் ஐந்து சிவப்பு நிற கோடுகளும், நான்கு பச்சை நிற கோடுகளும், 7 நட்சத்திரங்களும் இருந்தன.

பிங்கலி வெங்கையா:

இதன் பிறகு, 1921ல் மகாத்மா காந்தி ஒரு முறை விஜயவாடா வந்திருந்த போது பிங்கலி வெங்கையா என்பவர் தான் வடிவமைத்த கொடியை ஒரு முறை பார்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அப்போது இந்தியாவிலிருந்த இரு பெறும் மதங்களை குறிக்கும் வண்ணம் வெங்கையா, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் கொடியை வடிவமைத்திருந்தார். இதனை பார்த்துவிட்டு இவ்விரண்டு நிறங்களுக்கும் நடுவில் வெள்ளை நிறத்தைக் கொடுக்குமாறும், அது மற்ற மதங்களை குறிக்கும் விதமாக இருக்கட்டும் என்று தெரிவித்தார். மேலும் இதில் ஒரு சக்கர வடிவத்தையும் இணைக்குமாறும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படும் என முடிவான போது, வெங்கைய்யா அந்த கொடியை மறுவடிவம் செய்தார்.

அசோக சக்கரம் இணைப்பு:

முன்பிருந்த கொடியின் சிவப்பு நிறத்திற்கு பதிலாக காவி நிறம் கொடுக்கப்பட்டது. இந்த நிறத்துக்கு அடுத்ததாக வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும், காந்தி கூறிய சக்கரத்தை வெள்ளை நிறத்தின் நடுவிலும் இணைத்தார். இந்த கொடிக்கு பிறகு தான், இப்போது நாம் பயன்படுத்தும் கொடி வடிவமைக்கப்பட்டது.

கடைசியாக ஜூலை 22 1947ல் இதே மூவர்ணத்துடன், நடுவிலிருந்த சக்கரத்திற்குப் பதிலாக அசோகரின் தர்ம சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்த சக்கரத்தில் 24 கோடுகளும் இருந்தன. இந்த கொடி ஜாதி மத வேறுபாடின்றி இருக்கவேண்டும் என வடிவமைக்கப்பட்டது.

இதை தான் 75 வருடங்களாகச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக நாம் பயன்படுத்தி வருகிறோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?