World Cup 2023: மீண்டும் சச்சினின் சாதனையை தகர்த்த கோலி - முதல் வெற்றியை பதித்த இந்தியா!  twitter
இந்தியா

World Cup 2023: மீண்டும் சச்சினின் சாதனையை தகர்த்த கோலி - முதல் வெற்றியை பதித்த இந்தியா!

Keerthanaa R

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று, உலகக்கோப்பையில், தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்திய அணி வீரர் விராட் கோலி இந்த போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது ஐந்து முறை சாம்பியன்களான ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்களை வீழ்த்தினர்

200 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியும் தடுமாற்றமான தொடக்கத்தையே கொடுத்தது. ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ஹ்ரேயஸ் ஐயர் என மூவரும் டக் அவுட் ஆகினர். பின்னர் இணைந்த விராட் கோலி, கே எல் ராகுல் ஜோடி, பொறுமையாக விளையாடினர்.

கோலி 116 பந்துகளில் 85 ரன்களும், 115 பந்துகளில் ராகுல் 97 ரன்களும் அடித்திருக்க, இந்திய அணி 41 ஓவர்களில் இலக்கை எட்டி, வெற்றியடைந்தது.

கடைசி பந்தில், ஃபோர் அடிக்க முயற்சித்தார் கே எல் ராகுல். அது சிக்சராக சென்று முடிய, இந்திய அணி வெற்றிப்பெற்று விட்டது. தவறான ஷாட்டினால் தனது சதத்தை மிஸ் செய்தார் ராகுல். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறுபுறம் கோலியோ, முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்தினார். நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு, ஐசிசி போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 2719 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார் சச்சின் டெண்டுல்கர். தற்போது 2,720 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா, நான்காவது இடத்தில் யுவராஜ் சிங் மற்றும் 6வது இடத்தில் தோனி ஆகியோர் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?