இந்தியாவில் மொத்தம் எத்தனை வகை ஓட்டுநர் உரிமங்கள் உள்ளன? எப்படி பெறலாம்? canva
இந்தியா

இந்தியாவில் மொத்தம் எத்தனை வகை ஓட்டுநர் உரிமங்கள் உள்ளன? எப்படி பெறலாம்?

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இந்தியாவில் சில விதிமுறைகள் உள்ளன அதே போல், இந்த இந்த வாகனம் ஓட்டுவதற்கு தனித்தனியாக உரிமங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Keerthanaa R

வாகனம் ஓட்ட தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும், ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட தகுதியானவர்கள் ஆகிறோம். இது சட்டப்பூர்வமாக நமக்கு வழங்கப்படும் அனுமதி.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இந்தியாவில் சில விதிமுறைகள் உள்ளன அதே போல், இந்த இந்த வாகனம் ஓட்டுவதற்கு தனித்தனியாக உரிமங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏன் டிரைவிங் லைசன்ஸ் தேவை?

நாம் சாலைகளில் முறையாக, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவோம் என்பதற்கான சாட்சியாக உரிமம் பார்க்கப்படுகிறது, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுதான்.

வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு நாம் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். ஆனால் உரிமம் பெற நேரில் தான் செல்ல வேண்டும். உரிமம் ஒரு முறை வழங்கப்பட்டு அது செல்லுபடியாகும் கால அவகாசம் முடிவடைந்தால், அதனை நாம் ஆன்லைனில் புதுபித்துக்கொள்ளலாம்

வயது வரம்பு

இந்தியாவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் 16 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 16 வயதை அடைந்தவர்கள் 55 சிசிக்கும் குறைவான எஞ்சின் உடைய வாகனங்கள், கியர் இல்லாத வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு பெற்றோர் அல்லது கார்டியனின் ஒப்புதலும் அவசியம்.

18 வயதை அடைந்தவர்கள், 55சிசிக்கு அதிகமான எஞ்சின் உடைய வாகனங்கள் மற்றும் எல் எம் வி எனப்படும் இலக்ய் ரக வாகனங்கள் ஓட்ட உரிமம் பெறலாம்.

20 வயதை அடைந்துவிட்டவர்கள், கனரக வாகனங்கள் ஓட்டும் உரிமம் பெற தகுதிபெறுவார்கள்

ஓட்டுநர் உரிமத்தின் வகைகள்

  • கற்றல் உரிமம்

  • நிரந்தர உரிமம்

  • வணிக ஓட்டுநர் உரிமம்

கற்றல் உரிமம்

ஆங்கிலத்தில் எல் எல் ஆர் அல்லது லெர்னர்ஸ் லைசன்ஸ் எனப்படும் இந்த கற்றல் உரிமம், லைசன்ஸ் வாங்க முதற்படி. இதற்கு விண்ணப்பித்து எல் எல் ஆர் வழங்கப்பட்ட பின் 6 மாத காலம் வரை நமக்கு கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த காலக்கட்டதில் வாகனம் ஓட்ட பழகிக்கொண்ள்ளவேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆறு மாத கால அவகாசத்தை நாம் நீட்டித்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு சாலை விதிமுறைகள் குறித்த ஒரு தேர்வையும் நாம் எழுதவேண்டும்

நிரந்தர உரிமம்

கற்றல் உரிமம் வழங்கப்பட்டு நமக்கு நிரந்தர உரிமம் பெற 6 மாதம் டைம் வழங்கப்படும். நிச்சயமாக 6 மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதம் முடிவடைந்தவுடன் சென்று எடுத்துக்கொள்ளலாம். 18 வயது முடிந்திருக்கவேண்டும்

வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் வாகனம் ஓட்டி காண்பிக்கவேண்டும். அவரது அனுமதியின் பேரில் நமக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படும். ஒரு வேளை முதன்முறை தேர்ச்சி பெறவில்லை என்றால், 7 நாட்களுக்குள் மறுமுறை முயற்சிக்கலாம்

வணிக ஓட்டுநர் உரிமம்

டிரக்குகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும். 18 வயதை கடந்தவர்கள், அரசு அல்லது அரசு சார்ந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள், 8ஆம் வகுப்பு வரை முடித்தவர்கள் இந்த உரிமம் பெறலாம்

என்னென ஆவணங்கள் தேவை?

வயது சான்று - பான் கார்ட், பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்

முகவரிச் சான்று - ஆதார் அல்லது ரேஷன் கார்ட், வீட்டின் மின்சாரம் அல்லது டெலிஃபோன் பில் (வெளியூரில் தங்கியிருந்தால் வாடகை வீட்டின் முகவரியை சமர்ப்பிக்கலாம்)

இவற்றை தவிர விண்ணப்பக் கட்டணம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மெடிக்கல் சர்ட்டிஃபிக்கேட்கள் தேவை.

ஆர் சி, மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் மற்றும் வாகன காப்பீடும் அவசியம்

ஓட்டுநர் உரிமத்தை உங்கள் இல்லம் அமைந்திருக்கும் இடத்தின் அருகில், அல்லது அந்த பகுதி அடங்கும் வட்டார அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?