அமிதாப் பச்சன் டிவிட்டர்
இந்தியா

Amitabh Bachchan: ரூ. 60 லட்சம் செலவில் நடிகருக்கு வீட்டில் சிலை வைத்த ரசிகர்

Keerthanaa R

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர், அவர்களது வீட்டில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் முழு உருவச்சிலை ஒன்றை வைத்துள்ளனர். இதன் மதிப்பு 75,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாய்.

சினிமா நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளைத் திரையில் பார்த்து, அதனுடன் ஒன்றியிருப்பதால், அது முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்மை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடிகர்கள் நடிப்பதால், அவர்கள் மீதும் நமக்கு அதீத ஈர்ப்பு ஏற்படுகிறது.

அவர்களது பாவனைகள், அவர்களை பற்றி கேள்விப்படும் விஷயங்களை வைத்து அவர்களை போலவே பழக்கவழக்கங்களை நாம் மாற்றிக்கொள்வோம். நிறைய பேருக்கு, அவர்களுக்கு மிக பிடித்தமான நடிகர் நடிகைகள் கூறுவது தான் வேதவாக்கு. அவர்களை கடவுளாகவே பார்ப்பார்கள்.

இங்கும் ஒரு குடும்பம் ஒரு நடிகரை அப்படித் தான் கொண்டாடுகிறது. இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உலகம் முழுவதும் பிரபலம். அவரது தோற்றம், கனமான குரல், தேர்ந்த நடிப்பு ஆகியவற்றால் இவர் அசாத்திய புகழ் பெற்றார். இவரை பாலிவுட் பாட்சா, பிக் பி என்ற செல்ல பெயர்களைக் கொண்டு தான் இன்றுவரை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரிங்கு மற்றும் கோபி சேத் என்ற தம்பதி, அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர்கள். அவர் மீது கொண்ட அலாதி பிரியம் காரணமாக, அவரது முழு உருவச் சிலை ஒன்றை செய்து அவர்களது வீட்டின் முன்பு வைத்துள்ளனர்.

சுமார் 75,000 டாலர் செலவில், (அதாவது இந்திய மதிப்பில் ரூ.60 லட்சம்) இந்தியாவில் ராஜஸ்தானில் செய்யப்பட்டது இந்த சிலை. சிலை செதுக்குவது, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஷிப்பிங் மற்றும் அவர்களது வீட்டில் இதனை நிறுவுவது எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் இந்த 60 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

கண்ணாடி பெட்டிக்குள் அமிதாப் பச்சன் உட்கார்ந்துகொண்டிருப்பது போன்ற உருவச் சிலை தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவை, பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர் சேத் குடும்பத்தினர். நண்பர்கள், உறவினர்கள், அமிதாபின் ரசிகர்கள் என 600 விருந்தாளிகள், பட்டாசு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளது.

"அமிதாப் பச்சன் எனக்கும் என் மனைவிக்கும் கடவுளுக்கு நிகரானவர்" என தெரிவித்த கோபி சேத், நடிகர் அமிதாபின் படங்கள் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையும் தனக்கு பாடம் தான் என தெரிவித்தார். 1991ல் நியூ ஜெர்சியில் நவராத்திரி விழாவின் போது ஒரு முறை அமிதாப் பச்சனை சந்தித்ததாகவும், அன்று முதல் நடிகர் அமிதாபின் ரசிகனாக மாறிவிட்டதாகவும் சேத் கூறினார்.

"பொது இடத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம், பேச்சு, அவர் ரசிகர்களிடம் காட்டும் அன்பு, மரியாதை போன்ற நற்குணங்கள் எங்களை ஈர்த்தது. இதுவே அவருக்கும் மற்ற நடிகர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்."

மேலும், அமெரிக்காவில், சிலை வைப்பதென்பது கடினமான காரியம் தான் என்றார் சேத்.

எனினும் இந்த ரசிகரின் செயல் அமெரிக்கா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?