Indian Budget 2023  Twitter
இந்தியா

பட்ஜெட் 2023: இந்தியாவின் மிகச் சிறிய பட்ஜெட்டை தாக்கல் செய்தது யார்? Wow Facts

இந்திய பட்ஜெட் தாக்கல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்

Keerthanaa R

2023 -2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இது இவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் என்ற பெருமைய்டும் இவருக்கு சேரும்.

இந்திய பட்ஜெட் தாக்கல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்

  • சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஆர் கே சண்முகம் செட்டியார். இவர் தமிழ்நாட்டின் கோயம்பத்தூரை சேர்ந்தவர். நவம்பர் 26 1947ல் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  • பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இயங்கியபோது ஜேம்ஸ் வில்சன் என்பவர் முதன் முதலில் 1860 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜேம்ஸ் வில்சன் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் நிறுவனர் ஆவார்

  • முதன் முதலில் இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பெண், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆவார்.

  • இதுவரை அதிக முறை இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய். மொத்தம் 10 முறை இவர் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்

  • ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மற்றும் ராஜீவ் காந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரதமர்கள், தங்களது பதவிக்காலத்தில் தனித்தனியாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்

  • 1991ல் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் பட்ஜெட் தாக்கல் செய்த மிக நீண்ட பட்ஜெட்டில் 18,650 சொற்கள் இருந்தன. மிகச் சிறிய பட்ஜெட்டாக 1977ல் ஹெச் எம் படேல் தாக்கல் செய்த பட்ஜெட் இருக்கிறது. இது 800 வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் ஆகும்.

  • சுமார் 92 வருடங்களாக ரயில்வே பட்ஜெட் தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு முதலே இது மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.

  • 2001ஆம் ஆண்டு வரை பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாலை 5 மணியாக இருந்தது. 2001ஆம் ஆண்டு தான் அப்போதைய நிதியமைச்சர்யஷ்வந்த் சின்ஹா இந்த நேரத்தை காலை 11 மணியாக மாற்றினார். அப்போதிலிருந்து இந்த நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

  • 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?