இந்திய பாதுகாப்பு படையினர் அணியும் சீருடைகள் என்னென்ன? Part 1 canva
இந்தியா

இந்திய பாதுகாப்பு படையினர் அணியும் சீருடைகள் என்னென்ன? Part 1

இந்த ஒரு ஒரு பாதுகாப்பு படையினருக்கும் தனித்துவமான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Keerthanaa R

இந்தியாவில் பாதுகாப்பு படையினர் மூன்று முக்கிய வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை.

இதை தவிர, நம் நாட்டில் மற்ற சில பாதுகாப்பு படைகளும் இருக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்டவை.

இந்த ஒரு ஒரு பாதுகாப்பு படையினருக்கும் தனித்துவமான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இராணுவம்

இந்திய ராணுவத்தின் நிலையான சீருடையை நாம் கேமோபிளாஜ் என்று அழைக்கிறோம். அதாவது, இவர்கள் காடுகள் போன்ற பகுதிகளில் மறைந்துகொண்டால், அங்கிருக்கும் இயற்கையுடன் ஒன்றி இருப்பது போல பதுங்கிக்கொள்ளலாம். இந்த உடையில், பல விதமான பாக்கெட்கள் உள்ளன. அவர்கள் இருக்கும் படைப்பிரிவுக்கு ஏற்றாற்போல அவர்களது தொப்பிகள் மாறுபடுகின்றன. சம்மர் களத்தில் ஆலிவ் க்ரீன் நிற உடையிலும், குளிர் பிரதேசங்களில் பீரிஸ் நிற பிளேசர்களையும் அணிகின்றனர் இந்திய ராணுவத்தினர்.

விமானப்படை

இவர்களுக்கும் கோடைக்காலம், குளிர்காலம் இரண்டுக்கும் வெவ்வேறு சீருடைகள் இருக்கின்றன. கோடைக்காலத்தில் இந்திய விமானப்படையினர் வெளிர் நீல நிற டெரகோட்டா சட்டை மற்றும் நீல-சாம்பல் கால்சட்டைகள் அணிகின்றனர். அவற்றில் படையின் வீரம் மற்றும் தேசாய் பெருமையை ப்ரைஸ்ஸாரரும் பல்வேறு பேட்ஜ்கள் மற்றும் ரிப்பன்கள் இருக்கும்.

குளிர்காலத்தில், அதிகாரிகள் ஒரு வெளிர் நீல டெர்ரி வகை துணி சட்டை நீல-சாம்பல் கம்பளி கால்சட்டை மற்றும் பிளேஸர் அணிவார்கள்.

கடற்படையினர்

இந்திய கடற்படையின் சீருடைகள், முதன்மையாக வெள்ளை, கருப்பு மற்றும் நீல நிறங்களில் உள்ளன. இந்த ஒவ்வொரு நிறமும் , குறிப்பிட்ட சேவை மற்றும் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. அதில், தங்கக் கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட முழு-வெள்ளை சீருடை, அமைதி மற்றும் சக்தி இரண்டையும் குறிக்கிறது

தேசிய பாதுகாப்பு படையினர்

என்எஸ்ஜி அதிகாரிகள் ஒரு முழு கருப்பு நிற சீருடை அணிகின்றனர். ஒரு சட்டை, ஒரு ஜோடி கால்சட்டை, பெல்ட் மற்றும் முழு கருப்பு நிறத்தில் ஒரு பெரெட் அல்லது பீக் கேப் ஆகியவை சீருடையை முழுமைப்படுத்துகின்றன. பேட்ஜுகள் மற்றும் காலர் டேகுகளும் இதில் உள்ளன.

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்

இவர்கள் காக்கி நிறத்தில் சீருடைகள் அணிகின்றனர். ஒரு சட்டை, கால்ச்சட்டை, ஒரு காக்கி நிற பெல்ட் இதன் முக்கிய அம்சங்கள். போர் சூழ்நிலைகளில், அவர்கள் எல்லைப் பகுதிகளுக்கு ஏற்ற சிறப்பு உருமறைப்பு உடைக்கு மாறுகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?