Indian Railways Issued new rule: Women can travel in train without ticket Twitter
இந்தியா

Indian Railway: பெண்கள் டிக்கெட் இல்லாமலும் பயணிக்க முடியுமா? இந்த ரயில்வே விதி தெரியுமா?

ஒரு பெண் அல்லது குழந்தை ரயிலில் தனியாக டிக்கெட் இல்லாமல் இரவில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர் (TTE) அவரை ரயிலில் இருந்து இறக்க கூடாது.

Priyadharshini R

ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த, மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும்.

பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வாருங்கள் விரிவாக படிக்கலாம்.

இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பல சேவைகளை வழங்கி வருகின்றது.

பெண்களுக்கு சலுகை

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயிலில் பயணம் செய்யும் பெண்ணிடம் டிக்கெட் இல்லை என்றால் இறக்கிவிட முடியாது.

பெண்கள் அவசரமான சூழ்நிலையில் பயணித்தால் டிக்கெட் இல்லாத பெண்களை பாதி வழியில் இறக்கி விட முடியாது.

ரயில்வே விதிமுறை

இது போன்ற அவசரமான நிலையில் பெண்களுக்கு உதவுவதற்காக இந்திய ரயில்வே விதிமுறை வகுத்துள்ளது.

அதன்படி ஒரு பெண் அல்லது குழந்தை ரயிலில் தனியாக டிக்கெட் இல்லாமல் இரவில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர் (TTE) அவரை ரயிலில் இருந்து இறக்க கூடாது.

ஒருவேளை இறக்கிவிட்டால் சம்மந்தப்பட்ட பெண் ரயில்வே நிரவாகத்தில் புகார் செய்யலாம்.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதன் மூலம் பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடியும்.

குறிப்பாக இரவு நேர பயணத்தின் போது பயணிகளை எழுப்பி டிக்கெட்டை சரிபார்க்க தொந்தரவு செய்ய கூடாது.

ரயில்வே விதிகளின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயணிகள் நிம்மதியாக தூங்கு நேரம். ஆகவே டிக்கெட் பரிசோதகர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் இரவு நேரத்தில் ரயிலில் ஏறும் பயணிகளுக்கு இந்த விதி செல்லுபடி ஆகாது.

ரயிலை விட்டாலும் சீட் கிடைக்கும்

சில நேரம் நீங்கள் செல்லும் ரயிலை தவறவிட்டால் அடுத்த இரண்டு ரயில் நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்கு நீங்கள் சென்று உங்களுக்கான இருக்கையில் அமரலாம்.

அதுவரை உங்கள் இருக்கையில் யாரும் அமர முடியாது. இது இந்திய ரயில்வே பயணிகளுக்கு வழங்கியுள்ள விதிமுறைகளில் முக்கியமானதாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?