இந்தியர்கள் சுகமாக வேலை பார்க்க நினைக்கிறார்களா? ஆய்வு சொல்லும் காரணம் என்ன? canva (rep)
இந்தியா

இந்தியர்கள் சுகமாக வேலை பார்க்க நினைக்கிறார்களா? ஆய்வு சொல்லும் காரணம் என்ன?

Keerthanaa R

இந்தியர்கள் பெரும்பாலும் வேலை என்ற விஷயத்தில் சுகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் வேலைக்கு செல்பவர்கள் வெளியூருக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றுவந்தனர். இப்பொழுதும் அது நடக்கிறது என்றாலும், வேலை நிமித்தமாக மற்ற ஊர்கள், நாடுகளுக்கு செல்வதில் நமக்கு ஒரு சலுகை கிடைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வழக்கம் கொண்டுவரப்பட்டது. அதாவது, நம் வீடுகளில் இருந்துகொண்டே நிறுவனத்திற்கு பணியாற்றுவது.

இந்த வீட்டிலிருந்தபடியே வேலை என்ற கான்சப்ட் வந்த பிறகு ப்ரொடக்ட்டிவிட்டி அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.

மற்றொரு பக்கம் இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பது, ஒரு விதத்தில் ஊழியர்களுக்கு சுகத்தை அளித்துவிட்டதால், தற்போது வேலை என்ற விஷயத்தில் சுகத்திற்கு முன்னுரிமை தருவதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இண்டீட் என்ற வேலைவாய்ப்பு தளம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் 71 சதவிகிதம் இந்தியர்கள், வேலையில் சுகத்தை அல்லது flexibility-யை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது

அதாவது, அவர்களுக்கு தேவையான சலுகைகளை முக்கியத்துவப்படுத்துகின்றனர். உரிமைக்கோரல்கள் அதிகரித்துள்ளது

சுமார் 1200 பேர் (வேலை தேடுபவர்கள்) வைத்து இண்டீட் தளம் மேற்கொண்ட இந்த ஆய்வில் 70 சதவிகிதம் பேர் ஒர்க் ஃப்ரம் ஹோம் அல்லது இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்யும் ஆப்ஷன் இருக்கிறதா என்பதை நாடுகிறார்கள்.

67 சதவிகிதம் பேர் வேலையில் அவர்களுக்கு என்ன ஊதியம், சுகாதார காப்பீடு இருக்கிறதா, விடுமுறைகள் இருக்கிறதா போன்றவற்றை ஆராய்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இப்படியான கண்டிஷன்ஸை முன்வைப்பவர்களுக்கு நிறுவனங்கள் வேலை தருவதில்லை என்றும் கண்டறிந்துள்ளது. 6.5 சதவிகித நிறுவனங்கள் தான், ரிமோர்ட் ஒர்க் அல்லது ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற ஆப்ஷனை அளிப்பதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு

கொரோனா என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வேலைக்காக வெகு தூரம் பயணிக்க பெரும்பாலானோர் சமீப காலமாக விரும்புவதில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம், எவ்வளவு புகழ்பெற்ற, நல்ல ஊதியம் வழங்கக்கூடிய, ஜாப் செக்யூரிட்டி இருக்கக் கூடிய இடமாக இருந்தாலும், பணிக்கு சென்று வர அலுப்பாக இருக்கிறது என்றால், ராஜினாமா செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?