சஹத் - ஜியா: பெற்றோராகும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி! ஃபோட்டோஷூட் வைரல் இன்ஸ்டாகிராம்
இந்தியா

சஹத் - ஜியா: பெற்றோராகும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி! ஃபோட்டோஷூட் வைரல்

Keerthanaa R

இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியான கேரளாவை சேர்ந்த சஹத் ஜியா தம்பதி, தங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக உலகுக்கு அறிவித்திருக்கின்றனர். இவர்களது மெட்டர்னிட்டி ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சஹத் ஜியா தம்பதி. சஹத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜியா ஒரு நடனக் கலைஞர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காதல் தம்பதிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்துள்ளது. முதலில் தத்தெடுக்க நினைத்துள்ளனர். ஆனால், சட்ட ரீதியாக சிக்கல்கள் இருந்ததனால், இவர்களே கருவுற முடிவு செய்தனர்.

ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். சஹத், ஆணாக மாறும் சமயத்தில் அவரது மார்பகங்கள் அகற்றப்பட்டபோதிலும், கர்ப்பப்பை அகற்றப்படாமல் இருந்ததால், அவர் கருவுற முடியும் என்ற செய்தி அவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இவர்கள் மருத்துவ ரீதியில் சிகிச்சைகள் மேற்கொள்ள தொடங்கினர். முதலில் சஹத் இதற்கு தயங்கினாலும், தாயாக வேண்டும் என்ற ஜியாவின் ஆசை அவரது மனதை இளகச் செய்துள்ளது. சஹத்தின் உடலில் எந்த வித பாதிப்பும் இல்லை என, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறுதி செய்த பிறகு, ஜியா மூலமாகவே சஹத் கருவுற்றார். தற்போது 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் சஹத் ஜியா தம்பதிக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது.

இவர்கள் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின பெற்றோர் ஆகிறார்கள்.

“காலம் எங்களை ஒன்று சேர்த்தது. பெற்ரோராகவேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இன்று ஒரு 8 மாத ஜீவன் அவரது வயிற்றில் வளர்ந்து வருகிறது, அவரது முழு சம்மதத்தோடு” என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜியா நெகிழ்ச்சியுர பதிவிட்டிருந்தார்.

குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இவர்கள் முடிவுசெய்துள்ளனர். இவர்களது இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் கமெண்ட்டுகளும் வந்து குவிந்தன. பலரும், இந்த தம்பதிக்காக சந்தோஷப்படுவதாகக் கூறி, வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?