தாஜ் மஹால் டு மைசூரு பேலஸ் - இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இடங்கள் canva
இந்தியா

தாஜ் மஹால் டு மைசூரு பேலஸ் - இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இடங்கள்

இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்

Keerthanaa R

பரந்து விரிந்த நிலப்பரப்பும், பல்வேறு கலாச்சாரங்களும், கோவில்களும், சில கட்டிடக்கலை அற்புதங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியது தான் இந்தியா.

இதன் காரணமாகவே இந்தியாவில் சுற்றுலா மிகவும் பிரபலம்.

இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்

தாஜ் மஹால், உ.பி.

ஆக்ராவில் அமைந்திருக்கும் இந்த கட்டிடம் முகலாய பேரரசர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜிற்காக கட்டிய கல்லறையாகும். இதனை காதல் சின்னமாக போற்றுகின்றனர். இது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான தாஜ் மஹால், அதிகம் புகைப்படம் எடுக்கப்படும் உலக சின்னங்களில் ஒன்று

ஆண்டுக்கு, சராசரியாக இங்கு 7 முதல் 8 மில்லியன் மக்கள் பார்வையிட வருகின்றனர்

அமெர் கோட்டை, ராஜஸ்தான்

இதனை ஆம்பர் கோட்டை என்றும் அழைக்கின்றனர். ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருக்கும் இந்த மலைக்கோட்டையானது ரகசிய வழிப்பாதை, கண்ணாடி மண்டபம் ஆகியவற்றை உள்ளடிக்கியது.

ராஜ்புத் மற்றும் முகலாய அரசர்களின் கைவண்னங்களை இதில் காணலாம்.

இந்த கோட்டைக்கு சுமார் 2 முதல் 4 மில்லியன் மக்கள் பார்வையிட வருகின்றனர்

விருபக்‌ஷா கோவில், கர்நாடகா

இந்த அழிந்த நகரத்தின் மிச்சம், இந்தியாவில் மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித தலமாகும். இங்கு உள்ள தூண்களில் கர்நாடக சங்கீதத்தின் நாதங்களை கேட்கலாம்.

விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்ததால், ஹம்பி விஜயநகரம் என்று அறியப்படுகிறது. இங்கு அமைந்துள்ள விட்டலா கோவில் அதன் கட்டடக்கலை பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. 

ஹம்பிக்கு குறைந்தது 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். ஆனால், 2022ஆம் ஆண்டு, 2.5 லட்சம் மக்களே இங்கு வருகை தந்திருந்தனர்.

கஜுராஹோ நினைவுச்சின்னங்கள், மத்திய பிரதேசம்

நுணுக்கமான வேலைப்பாடுகள் உடைய சிற்பங்கள் கொண்ட குகைகள், கட்டிடங்கள் இங்கு காணலாம். சந்தேலா வம்சத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த கலை அற்புதத்தை காண 3 முதல் 4 லட்சம் பேர் வருகின்றனர்

மைசூரு பேலஸ், கர்நாடகா

வாடையார் வம்சத்தினரால் கட்டமைக்கப்பட்ட இந்த அரண்மனை ஆண்டு முழுக்க சுற்றுலா பயணிகள் வரத்தை காணும் ஒரு இடமாகும்

நவராத்திரி சமயத்தில் இங்கு 10 நாட்களும் நடைபெறும் திருவிழா பிரபலமாகும். இந்த இடத்தை காண ஆண்டுதோறும் 7 மில்லியன் மக்கள் வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?