World Cup: உலககோப்பை தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா - மாற்று வீரர் யார்? twitter
இந்தியா

World Cup: உலககோப்பை தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா - மாற்று வீரர் யார்?

Keerthanaa R

காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமல் இருந்த இந்திய அணி ஆல் ரௌண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா என்ற பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலககோப்பை 2023ன் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது இந்திய அணி. இந்நிலையில், காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பௌலிங் செய்து கொண்டிருக்கும்போது இவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பாதியிலேயே அந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் என இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி அதன் பிறகான போட்டிகளிலும் வென்றது தான். காயம் விரைவில் குணமடையும் எனவும் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அவர் உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேறியுள்ளார். இதனால் இவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசியை தெரிவித்தது. மேலும் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இந்த முறை உலககோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வங்கதேச அணி போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

அரையிறுதிக்கு செல்லும் அடுத்த மூன்று அணிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

நாளை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?